டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

வரும் ஜனவரியில் துவங்க இருக்கும் 2021 டக்கார் ராலி பந்தயத்தில் பங்கேற்க உள்ள ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

உலகின் மிக சவாலான டக்கார் ராலி பந்தயம் வரும் ஜனவரி 3ந் தேதி சவூதி அரேபியாவில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கு உலகம் முழுவதும் உள்ள மோட்டார்ஸ்போர்ட்ஸ் வீரர்களும், அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பல நாட்டு அணிகள் டக்கார் நோக்கி தங்களது வாகனங்கள், வீரர்கள் மற்றும் பணியாளர்களுடன் சவூதி அரேபியாவில் முற்றுகையிட துவங்கி இருக்கின்றன.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

இந்த நிலையில், இந்தியாவின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியும் டக்கார் ராலியில் பங்கேற்க தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று தனது அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களின் விபரங்களை ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரேஸிங் டீம் வெளியிட்டுள்ளது.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

2020 எம்ஐஎம் க்ராஸ் கன்ட்ரி பாஜா வேர்ல்டு கப் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்ற செபாஸ்டியன் பியூலர், 2019ம் ஆண்டு பான் ஆப்ரிக்கா ராலி பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜாக்கம் ரோட்ரிக்கஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் ஆகியோர் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் டக்கார் ராலியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் ஹீரோ நிறுவனத்தின் புதிய 450 ராலி ரேஸ் பைக் பயன்படுத்தப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட சேஸீ, எஞ்சின் ஆகியவற்றுடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. 450சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

கொரோனாவால் ஏற்பட்ட ஓய்வு நேரத்தை பயன்படுத்தி இந்த புதிய பைக் மாடலை மிகச் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியின் மேலாளர் வோல்ஃகேங் பிசெர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு துவக்கத்தில் டக்கார் ராலியில் ஹீரோ அணி வீரர் பாவ்லோ கன்கால்ஸ் மரணமடைந்தார்.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

இதனால், அந்த அணியின் சக வீரர்கள், பணியாளர்கள் மிகுந்த அதிர்ச்சியிலும், வேதனையிலும் இருந்தனர். இந்த நிலையில், அந்த துயரச் சம்பவத்திலிருந்து மீண்டு தற்போது டக்கார் ராலியை ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சந்திக்க இருக்கிறது.

டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!

இந்த முறை மிக முக்கிய இடத்தை பிடிக்கும் நோக்கில் புதிய திட்டங்களுடன் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி பங்கேற்க உள்ளது. இதனால், வரும் ஜனவரியில் நடைபெறும் டக்கார் ராலியில் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Read Articles

English summary
Hero MotoSports Team Rally has revealed rider squad details For Dakar 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X