வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

வரப்போகும் பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதன் ஆப்டிமா எச்எக்ஸ் சிட்டி ஸ்பீடு இ-ஸ்கூட்டரின் விலையை பெரிய அளவில் குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா எச்எக்ஸ் சிட்டி ஸ்பீடு இ-ஸ்கூட்டரை ரூ.71,950 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த விலை ரூ.14,390 வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

இதனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி வாடிக்கையாளர்கள் ரூ.57,560 என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலேயே பெற முடியும். இதன் மூலமாக ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் சிட்டி ஸ்பீடு இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் முதன்மையானதாக மாறியுள்ளது.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

இந்த சிறப்பு விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் சிட்டி ஸ்பீடு இ-ஸ்கூட்டரில் 550 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், 51.2 வோல்ட்/30ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படுகிறது.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 42kmph என்ற வேகத்திலும் முழு-சார்ஜில் ஏறக்குறைய 82 கிமீ தூரத்திற்கும் பயணம் செய்ய முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்ய 5 மணிநேரங்கள் தேவைப்படும்.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

73 கிலோ எடையில் வழங்கப்படும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெள்ளை, க்ரே மற்றும் சியான் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது. ஆப்டிமா எச்எக்ஸ் சிட்டி ஸ்பீடு இ-ஸ்கூட்டர் மாடலுக்கு மூன்று வருட உத்தரவாதத்தை ஹீரோ எலக்ட்ரிக் பிராண்ட் வழங்குகிறது.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

மாதத்திற்கு ரூ.2,999 என்ற சந்தா திட்டத்திலும் இந்த ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இதற்காக இந்நிறுவனம் ஆட்டோவெர்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி இவ்வாறு தயாரிப்புகளை மிக மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க மும்பையை சேர்ந்த ஒடிஒ கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனத்துடனும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் கை கோர்த்துள்ளது.

வெறும் ரூ.58 ஆயிரத்தில் ஹீரோ ஆப்டிமா இ-ஸ்கூட்டர்... எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கனவு நனவாகும் நேரம் இதுதான்

இந்த கூட்டணி சந்தையில் உள்ள நிதி தேர்வுகளை காட்டிலும் 30 சதவீதம் வரையிலான பணத்தை தங்களது இ-ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் சேமிக்க வழிவகை செய்யும் என்று ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Optima HX City Speed e-scooter available at a discount
Story first published: Wednesday, October 14, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X