தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டராக பிளஷர் ப்ளஸ் 110 எஃப்ஐ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎஸ்6-க்கு இணக்கமான ஸ்கூட்டரின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.54,800ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ள பிளஷர் ப்ளஸ் 110 எஃப்ஐ பிஎஸ்6 ஸ்கூட்டரின் இந்த விலை ஸ்டீல் வீல் வேரியண்ட்டிற்கு மட்டும் தான். மற்றொரு அலாய் வீல் வேரியண்ட் ரூ.56,800 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரு வேரியண்ட்களும் தங்களது பிஎஸ்4 வெர்சனில் இருந்து ரூ.6,300 வரை விலை அதிகரிப்பை பெற்றுள்ளன.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

பிஎஸ்6 மாற்றத்தால் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

இதன் என்ஜின் வழக்கம்போல் அதிகப்பட்சமாக 8.15 பிஎச்பி பவர் மற்றும் 8.7 என்எம் டார்க் திறனை தான் ஸ்கூட்டருக்கு வழங்கவுள்ளது.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

ஆனால் என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 7,000 ஆர்பிஎம் வரை சென்றால் தான் வெளிப்படும் என்றில்லாமல், அதற்கு 500 ஆர்பிஎம் முன்னதாகவே, அதாவது 6,500 ஆர்பிஎமிலேயே வெளிப்படுத்தப்பட்டுவிடும்.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

இதேபோல் 8 சென்சார்களை கொண்ட ப்ரோகிராம் எஃப்ஐ உடன் உள்ள அட்வான்ஸ் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பம் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளதால் அக்ஸலரேஷனும் முன்பை விட 10 சதவீதம் வேகமாக இருக்கும். எரிபொருள் திறனில் இவ்வாறு அப்டேட்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் டார்க் திறனில் மாற்றம் இல்லை.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

இது அதே 5,500 ஆர்பிஎம்-ல் தான் அதிகப்பட்ச என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஓட்டு மொத்தமாக பார்க்கும் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் அலாய் வீல் வேரியண்ட், க்ரோம்-ஆல் சூழப்பட்ட ஹெட்லைட் அமைப்பையும், புதிய டிசைனில் பக்கவாட்டு பேனல்கள் மற்றும் க்ரோம்-அவுட் 3டி லோகோவையும் பெற்றுள்ளது.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

இந்த புதிய பிஎஸ்6 பைக் முன்புறத்தில் ட்ரைலிங் லிங்க் சஸ்பென்ஷனுடனும், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பருடன் இயங்கவுள்ளது. ப்ரேக்கிங்கிற்காக இரு சக்கரங்களிலும் சிபிஎஸ் உடன் நிலையாக 130மிமீ டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மாலோ லீ மேசன் கூறுகையில், ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட், ஹெச்.எஃப் டீலக்ஸ் பிஎஸ்6 பைக்குகளை தொடர்ந்து, பிஎஸ்6-க்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் பணியில் ஹீரோ நிறுவனம் தன்னை தீவிரப்படுத்தியுள்ளது.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் ஒரு நல்ல மதிப்பு உண்டு. இதனை மனதில் வைத்துத்தான் இந்த புதிய பிஎஸ்6 பிளஷர் ப்ளஸ் 110 எஃப்ஐ ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் தற்போதைய இளம் தலைமுறையினர் இடையே நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

ஹீரோ நிறுவனத்தில் இருந்து அடுத்த சில மாதங்களுக்கு பல பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என கூறினார். இந்நிறுவனத்தின் ஜெய்பூர் தொழிற்சாலையில் இந்த புதிய பிஎஸ்6 பைக்கிற்கான டிசைன் மற்றும் ஸ்டைலிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த ஹீரோ மோட்டோகார்ப்...!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரில் ஹேண்டிலிங் மிக சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இந்திய சந்தையில் பிளஷர் ப்ளஸ் 110 எஃப்ஐ மாடலுக்கு போட்டியாக ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 போன்ற பிரபலமான ஸ்கூட்டர்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Hero Goes Green With Pleasure Plus FI BS6
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X