எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இன்னும் பிஎஸ்6 தரத்தில் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை. இதற்கிடையில் இந்நிறுவனம் இந்த 200சிசி பைக்கிற்கு வழங்கவுள்ள புதிய இருக்கை கவர் தேர்வு மற்றும் மோடோக்ராஸ் ஹெல்மெட் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

ஹீரோ நிறுவனம் இந்த ஆக்ஸஸரீகளை முற்றிலும் எக்ஸ்பல்ஸ் 200 பைக் மாடலை வெவ்வேறு விதமான காட்சிகளில் மனதில் வைத்து கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த பிஎஸ்6 பைக்கிற்கான புதிய இருக்கை கவர்கள் மாடர்ன், டூரர், அட்வென்ஜெர் மற்றும் ட்யூல்-டோன் என்ற நான்கு தேர்வுகளில் கிடைக்கவுள்ளன.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

இவை ஒவ்வொன்றிலும் இருக்கை கவர் வெவ்வேறு விதமான பிடிமானதை ஓட்டுனருக்கு வழங்கும். அதாவது ஆஃப்-ரோட்டிற்கு கூடுதலான பிடிமானம் தேவை. அதுவே நகர்புற சாலைகளில் மற்றும் தொலைத்தூர பயணங்களில் இருக்கை சவுகரியமானதாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

இருக்கை கவர்கள் தேர்வுடன் வழங்கப்பட்டுள்ள ஹெல்மேட் மோட்டார்சைக்கிளின் பண்பிற்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கப்பட்டுள்ள நிற தேர்வில் ஒரு நிறம் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

இந்த கூடுதல் இருக்கை கவர்களுக்கும் மோட்டோக்ராஸ் ஹெல்மெட்டிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை குறித்த எந்த தகவலையும் ஹீரோ நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. மிக விரைவில் சந்தைக்கு வரவுள்ள பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகத்தின்போது இவை வெளியிடப்படலாம்.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

முற்றிலும் அட்வென்ஜெர் பயணத்திற்கான மோட்டார்சைக்கிளாக வடிவமைகப்பட்டுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் சிறப்பம்சங்களாக சற்று உயரத்தில் பொருத்த மட்கார்டு, எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் தொலைத்தூர பயணத்திற்கான சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 18 பிஎச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்-ல் 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் தான் ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரிம் 200எஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீரோ

முன்னதாக தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 250மிமீ முன்புற டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ், 10 விதமான ப்ரீ-லோடு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 220மிமீ ரியர் மோனோஷாக், ஃப்ளாட் சீட், கியர் பெடல், ஹேண்டில்பார் ரைசர்ஸ், க்னாப்பியர் டயர்கள் உள்ளிட்டவை அடங்கிய ராலி கிட்டையும் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hero XPulse 200 BS6 new seat cover options & motocross helmet revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X