Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்காக மாறிய ஸ்பிளென்டர்... இதற்கான செலவுதான் இன்னும் ஆச்சரியமா இருக்கு!
இந்தியர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகனமான ஸ்பிளென்ட்ர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்காக உருமாறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஸ்பிளெண்டர் பைக்கும் ஒன்று. இது நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமும்கூட. இந்த பைக்கையே விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கஃபே ரேசர் பைக்கிற்கு இணையான ஸ்டைலில் இந்தியாவைச் சேர்ந்த மாடிஃபிகேஷன் நிறுவனம் மாற்றியிருக்கின்றது.

இந்த தோற்றத்திற்காக பல்வேறு அணிகலன்கள் நீக்கப்பட்டு புதிய ஆஃப்டர் மார்க்கெட் உடல்கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, உருமாற்றத்தை ஏற்றும் வகையில், ஸ்பிளென்டர் பைக்கின் ஃபிரேமில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்தே அனைத்து புதிய கூறுகளும் இப்பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, டயர் முதல் இருக்கை வரை அனைத்தையும் மாடிஃபிகேஷன் குழு மாற்றியமைத்துள்ளது. ஏன் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட், மட்டுகுவார்ட், ஹேண்டில், ஃபுட் ரெஸ்ட் உள்ளிட்டவற்றை விட்டு வைக்காமல் அவர்கள் மாற்றியிருக்கின்றனர். இதனால்தான் ஸ்பிளெண்டர் பைக் தற்போது புதிய உருவத்திற்கு மாறியிருக்கின்றது.

இந்த புதிய உருவ மாற்றத்தால் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய பைக்காக இது மாறியிருக்கின்றது. சற்று நீளம் குறைந்த இருக்கையைப் பயன்படுத்தியிருக்கின்ற காரணத்தினால் இதன் உருவம் மட்டுமே இப்படி மாறியிருக்கின்றது. ஆகையால், தாராளமாக அல்லாமல் சற்று ஒடுங்கியவாறே இருவர் இதில் பயணிக்க முடியும்.

இதைத்தொடர்ந்து, சில இடங்களில் புதிய வண்ணத்தையும் மாடிஃபிகேஷன் குழுவினர் சேர்த்திருக்கின்றனர். சஸ்பென்ஷன்களில் நிற மாற்றத்தை நம்மால் காண முடிகின்றது. பிரீமியம் லுக்கை வழங்க வேண்டும் என்பதற்காக கோல்டன் நிறம் சஸ்பென்ஷனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த மாற்றங்களினாலேயே ஹீரோ ஹோண்டா ஸ்பிளென்டர் பைக், பிஎம்டபிள்யூ பைக்கின் அவதாரத்தைப் பெற்றிருக்கின்றது. புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ப்யூவல் டேங்கினாலேயே இந்த தோற்றத்தை பைக் பெற்றிருக்கின்றது. பழைய கஃபே ரேஸர் ரக பிஎம்டபிள்யூ பைக்கின் ப்யூவல் டேங்கே இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதில், பிஎம்டபிள்யூ சின்னம் தற்போதும் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

Image Courtesy: Reyansh Khichi
இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமே ரூ. 60 ஆயிரம் மட்டுமே செலவாகியிருப்பதாக கூறப்படுகின்றது. இது மிக அதிகம் என்று கூறிவிட முடியாது. கடந்த காலங்களில் புதிய பைக்கின் விலைக்கே வாகன மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், இது மிக மிக குறைந்த செலவில் செய்யப்பட்ட வாகன மாடிஃபிகேஷன் ஆகும்.
தற்போது உருமாற்றத்தைப் பெற்றிருப்பது 1994ல் ஹீரோ மற்றும் ஹோண்டா இணைவில் விற்பனைக்கு வந்த ஸ்பிளென்டர் பைக்காகும். இதனையே புதிய அவதாரத்திற்கு வாகன ஆர்வலர்கள் மாற்றியமைத்திருக்கின்றனர். இதுபோன்ற ஓர் வாகனத்தின் உண்மையான தோற்றத்தை மழுங்க செய்து, வேறொரு உருவம் கொடுப்பது இந்திய மோட்டார் வாகன விதிகளின்படி சட்டவிரோத செயல் என்பது குறிப்பிடத்தகுந்தது.