ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்!

ஆக்டிவா இடத்தை காலி செய்ய ஹீரோ நிறுவனம் விரைவில் இரு ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளது. இது தற்போது நிலவி வரும் வாகன விற்பனை மந்த நிலைக்கு தீர்வு காண உதவும் என நம்பப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட வாகன விற்பனை மந்தநிலைக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில் வருகின்ற தீபாவளி பண்டிகை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

இந்தியர்களில் பெரும்பாலானோர் பண்டிகைத் திருநாளில் புதியப் பொருட்களை வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் கடந்த காலங்களில் பண்டிகை நாட்களிலேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இம்மாதிரியான நேரத்தில் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக வாகன தயாரிப்புகள் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதுண்டு.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

ஆனால், ஹீரோ நிறுவனத்தின் தனது புதிய தயாரிப்பின் மூலம் மக்களைக் கவர திட்டுமிட்டுள்ளது. விரைவில், ஹீரோ பிளஷர் பிளஸ் பிளாட்டினம் பிளாக் எடிசன் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டீல்த் ஆகிய இரு ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த அது திட்டமிட்டிருக்கின்றது. இவையிரண்டுமே நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றான ஹோண்டாவிற்கு போட்டியாக இந்திய சந்தையில் அமர இருக்கின்றன.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

ஹீரோ பிளஷர் பிளஸ் பிளாட்டினம் பிளாக் எடிசன்:

ஹீரோ நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பிளஷர் மாடலின் பெயர் பலகையுடன் இந்த ஸ்கூட்டரை கடந்த 2019ம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஓர் சிறப்பு எடிசன் ஆகும். வழக்கமான பிளஷர் மாடல் ஸ்கூட்டரைக் காட்டிலும் இது மிகவும் அட்டகாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. மேலும், சற்று பெரிய எஞ்ஜினையும் இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

இந்த எஞ்ஜின் எலெக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்டதாகும். மேலும், பிஎஸ்6 தரத்தில் இதனை ஹீரோ உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரை ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை என்பதை வெளிக்காட்டுவதற்காக சில மேற்புற வேலைகளையும் அந்நிறுவனம் செய்திருக்கின்றது. குறிப்பாக, வழக்கமான மாடல் பிளஷர் ஸ்கூட்டரைக் காட்டிலும் மிக வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் அது அமைந்திருக்கின்றது.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

கருப்பு-பழுப்பு ஆகிய இரு நிறங்கள் கொண்ட இருக்கை, இதற்கு மேட்சாக அதே பழுப்பு நிறத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பேனல்கள் மற்றும் ஃபூட் போர்ட்கள் இந்த ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் பிளஷர் பிளஸ் பிளாட்டினம் பிளாக் எடிசன் ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

இந்த தோற்றத்தைக் கூடுதலாக மெருகேற்றும் வகையிலேயே முன்பக்க அப்ரான், ரிம்களில் குரோம் பூச்சுக் கொண்ட அக்ஸெண்டுகள், வெப்பம் தாங்கும் பாதுகாப்பு ஷீல்டு, பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள், ஹேண்டில்பார் மற்றும் பேக் ரெஸ்ட் மவுண்ட் உள்ளிட்டவை வித்தியாசமான நிறக் கலவையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டீல்த் எடிசன்:

ஹீரோ பிளஷர் பிளஸ் பிளாட்டினம் பிளாக் எடிசன் ஸ்கூட்டரைப் போலவே மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டீல்த் எடிசன் ஸ்கூட்டரும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, இதன் அடர்ந்த மேட் வகை சாம்பல் நிறம், ஸ்கூட்டருக்கு மிகவும் ரம்மியமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன், கூடுதலாக கார்பன் கருப்பு நிற ஸ்டிரைப்கள் வெளிப்புற உடல் பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

மேலும், புதிய கிராஃபிக்குகள் மேட் சாம்பல் நிறத்திற்கு ஏற்ப ஸ்கூட்டரின் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கின்றன. இதிலும், இரு நிறங்கள் கொண்ட இருக்கைகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஸ்கூட்டரை கூடுதல் பிரீமியமானதாக காட்சிப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

அட்டகாசமான தோற்றம் மற்றும் புதிதாக கூடுதல் தொழில்நுட்ப வசதிகளும் இந்த புதிய இருசக்கர வாகனங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அலாய் வீல், யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட், எல்இடி மின் விளக்கு (இருக்கைக்கு கீழே), ட்யூப் லெஸ் டயர், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் மற்றும் ஐபிஎஸ் (பிரேக்கிங் வசதி) உள்ளிட்ட புதிய வசதிகள் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

ஹீரோ பிளஷர் பிளஸ் சிறப்பு எடிசன் ஸ்கூட்டரில் 110சிசி திறனுடைய ஏர் கூல்டு, ப்யூவர் இன்ஜெக்டட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8எச்பி மற்றும் 8.7 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது புதிய பிஎஸ்-6 தரத்தைக் கொண்டது என்பதை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டும். இந்த புதிய வசதியால் சற்று பெட்ரோலை குறைவாகவே குடிக்கும் என கூறப்படுகின்றது. எனவேதான் இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 110 சிசி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டீல்த், இந்த ஸ்கூட்டரில் 125 திறன் கொண்ட எஞ்ஜினை ஹீரோ பயன்படுத்தியுள்ளது. இதுவும் ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்சன் திறனுடையதாகும். ஆனால் இது 9 பிஎச்பி மற்றும் 10.4 என்எம் டார்க்கை திறனை வெளிப்படுத்தும். இது ஆக்டிவாவின் 125 மாடல் மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற 125சிசி திறனுடைய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறங்கியிருக்கின்றது.

ஆக்டிவாவை துவம்சம் செய்ய ஹீரோ திட்டம்... விரைவில் அறிமுகமாகிறது அட்டகாசமான இரு ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள்...

விலை:

விலை பற்றிய தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான மாடல்களைவிட 2 ஆயிரங்கள் அல்லது 3 ஆயிரங்கள் ரூபாய் வரை உயர்வான விலையில் இவை விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பு எடிசனுக்கான அலங்காரங்களைப் பெற்றதே விலையுயர்விற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

குறிப்பு: ஒரு சில புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கபட்டவை.

Most Read Articles

English summary
Hero To Launch The Pleasure+ Platinum Black Edition and Maestro Stealth 125 Soon In India: Read More To Find Out. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X