இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் 2020 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 160சிசி பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

ஹீரோ நிறுவனம் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தியுள்ளது. விரைவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படவுள்ள இந்த 160சிசி பைக்கின் இரு வேரியண்ட்களின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.99,950-ல் மற்றும் ரூ.1.03 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

இரு வேரியண்ட்களிலும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ பெற்றுள்ள இந்த புதிய பைக்கானது ஸ்போர்ட்ஸ் ரெட், வைப்ரண்ட் ப்ளூ மற்றும் பேர்ல் சில்வர் வொய்ட் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பைக்கின் தயாரிப்பு பணிகள் ஜெய்பூரில் உள்ள ஹீரோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

முழு-எல்இடி தரத்தில் ஹெட்லேம்பை கொண்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் மக் சக்கரங்களில் சிவப்பு பின்-ஸ்ட்ரிப்பிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. தரையில் இருந்து பைக்கின் இருக்கையின் உயரம் 796மிமீ ஆகவும், எரிபொருள் திறன் கொள்ளளவு 12 லிட்டராகவும் உள்ளது.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

இந்த புதிய பைக் க்ரவுண்ட் க்ளியரென்ஸை 165மிமீ என்ற அளவிலும், மொத்த எடையை 138.5 கிலோவிலும் பெற்றுள்ளது. இதன் 17 இன்ச் மக் சக்கரங்களில் 130-பிரிவு ரப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷிற்கு 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், 7-ஸ்டெப் அட்ஜெஸ்ட்டபிள் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

ஹீரோ நிறுவனம் புதிய எக்ஸ்ட்ரீம் பைக் மாடலில் பிஎஸ்6 தரத்தில் 160சிசி, 2-வால்வு என்ஜினை ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் பொருத்தியுள்ளது. 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

தயாரிப்பு நிறுவனம் ஏஆர்ஏஐ அமைப்பால் மதிப்பிடப்பட்ட இந்த பைக்கின் எரிபொருள் திறன் அளவை இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் பைக் வழக்கமான ரைடிங் சூழ்நிலையில் 45 kmpl மைலேஜ்ஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 0-விலிருந்து 60 kmph என்ற வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பைக்கின் அதிகப்பட்ச வேகம் 110 kmph ஆகும்.

இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமானது..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஒருவழியாக 2020 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் சந்தையில் அறிமுகமாகிவிட்டது. ஆனால் இதற்கு விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ள பஜாஜின் புதிய என்எஸ்160 மற்றும் சுசுகி ஜிக்ஸெர் 150 உள்ளிட்டவற்றின் அறிமுகம் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
New Hero Xtreme 160R Motorcycle Launched In India: Prices Start At Rs 99,950
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X