புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரியர்களுக்கு இது சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் செமி ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருந்து வருகிறது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அதற்கு தக்கவாறு இதன் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் தற்போது ஆயில்கூல்டு சிஸ்டத்துடன் ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்சென்ஸ் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் இடம்பெற்றிருக்கும் புதிய 200சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சின் அதிகபட்சமாக 17.8 பிஎச்பி பவரையும், 16.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆயில் கூல்டு சிஸ்டத்துடன் வரும் இந்த எஞ்சின் வெப்பத்தை சிறப்பாக பரிமாற்றும் தொழில்நுட்பத்துடன், நீடித்த உழைப்பை வழங்கும் விதத்திலும் இருக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் இரட்டை எல்இடி ஹெட்லைட் அமைப்பு, எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் குறைவான வேகத்தில் செல்லும்போது பைக் எஞ்சின் அணைந்து விடுவதை தவிர்த்து, குறைவான வேகத்தில் இயக்குவதற்கு அனுமதிக்கும் ஆட்டோ செயில் தொழில்நுட்பம், வழுக்கிச் செல்வதை தவிர்க்கும் தன்மையுடன் இருக்கைகள், முழுமையான எல்சிடி திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கியர் இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடலானது ஸ்போர்ட்ஸ் ரெட், பாந்தர் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகள் தவிர்த்து, புதிய பியர்ல் ஃபேட்லெஸ் ஒயிட் என்ற வண்ணத் தேர்விலும் வந்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் ரூ.1.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பரந்து விரிந்த சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க், இதற்கு வலு சேர்க்கும் விஷயமாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hero Motocorp has launched the BS 6-compliant Xtreme 200S bike in India and priced at ₹1,15,715 (ex-showroom Delhi).
Story first published: Tuesday, November 10, 2020, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X