புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

தீபாவளிக்கு முன்னதாக சந்தையில் களமிறங்கி இருக்கும் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடல் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சரியான சாய்ஸாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக்கில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்த இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

புதிய வண்ணத் தேர்வு

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்- 6 மாடலில் பியர்லெஸ் ஃபேட்லெஸ் என்ற புதிய வெள்ளை வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, பாந்தர் பிளாக், ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். எல்இடி ஹெட்லைட், ஸ்டைலான செமி ஃபேரிங் பேனல்கள், புளூடூத் இணைப்புடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஒற்றை இருக்கை அமைப்பு, பின்புறத்திற்கு அழகு சேர்க்கும் வால்பகுதி டிசைன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

ஆயில் கூல்டு எஞ்சின்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்4 மாடலில் பயன்படுத்தப்பட்ட 199.6சிசி எஞ்சின்தான் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 எஞ்சின் ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்டதாக இருந்தது. ஆனால், தற்போது பிஎஸ்6 மாடலானது ஆயில் கூல்டு சிஸ்டத்துடன் வந்துள்ளது. மேலும், பிஎஸ்-4 எஞ்சின் 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது. ஆனால், பிஎஸ்-6 எஞ்சின் அதிகபட்சமாக 17.8 பிஎச்பி பவரையும், 16.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் இருக்கிறது. சற்றே இதன் குறைந்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

எடை அதிகரிப்பு

பிஎஸ்-4 எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடலானது 154.5 கிலோ கெர்ப் எடை கொண்டது. இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாடலானது 5.5 கிலோ எடை அதிகரித்துள்ளது. இதுவும் செயல்திறன் குறைவதற்கு முக்கிய காரணமாக, அமைந்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

முக்கிய வசதிகள்

இந்த பைக்கில் புளூடூத் இணைப்பு வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை பெறுவதற்கும், குறைவான வேகத்தில் செல்லும்போது எஞ்சின் அணைந்து போவதை தவிர்க்கும் ஆட்டோ செயில் டெக் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 மாடலில் டைமண்ட் டைப் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. அதேபோன்று, முன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ ரோட்டர் கொண்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

விலை உயர்வு

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.1.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலைவிட ரூ.13,000 கூடுதல் விலையில் இந்த பிஎஸ்6 மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்!

சிறந்த தேர்வு?

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மாடலானது ரூ.1.25 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த 200சிசி மாடல் விலை குறைவான தேர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும் விஷயமாக கருதலாம். மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மிக விரிவான சர்வீஸ் நெட்வொர்க்கும் இதற்கு வலுசேர்க்கிறது.

Most Read Articles
English summary
Here are six things you should know about new Hero Xtreme 200S BS-6 bike.
Story first published: Wednesday, November 11, 2020, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X