2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது 200சிசி பைக்கின் விலை குறித்த விபரங்கள் கசிந்துள்ளன.

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

இந்த தகவல்களில் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.15 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விலை இந்த பைக்கின் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் ரூ.13,000 அளவில் அதிகமானதாகும். ஏனெனில் பிஎஸ்4 எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் விலை ரூ.1.02 லட்சமாக இருந்தது.

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

வழக்கமான 199.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் பொருத்தப்படவுள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிலும் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 17.8 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 16.45 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

இந்த பைக்கை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. அவற்றின் மூலம் பைக்கிற்கு வழங்கப்படவுள்ள புதிய நிறத்தேர்வுகள் உள்ளிட்டவற்றை அறியலாம். மற்றப்படி பைக்கின் நிமிர்ந்த தோற்றத்திலோ அல்லது எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பிலோ மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

சேவை நினைவூட்டும் அலாரம், கியர் பொஷிசன் இண்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் மற்றும் பயண தொலைவு உள்ளிட்டவற்றை காட்ட டிஜிட்டல் எல்சிடி தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கும். ப்ரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளில் மாற்றம் எதுவும் இருக்காது.

2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை இதுதானா? இணையத்தில் கசியும் விபரங்கள்

எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்புகளாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் யூனிட்டும் வழங்கப்படவுள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

Most Read Articles

English summary
Hero Xtreme 200S prices revealed. Here Are More Details.
Story first published: Wednesday, November 4, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X