புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டிசைன் சும்மா மிரட்டுதில்லே!

மிரட்டலான டிசைன் அம்சங்களுடன் இளசுகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் வரிசை பைக் மாடல்கள் இளைஞர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கின்றன. நேக்கட் ரக பைக்குகளை விரும்பும் இளைஞர்களின் தேர்வில் இந்த பைக் மாடலுக்கும் இடம் இருக்கிறது. இந்த நிலையில், எக்ஸ்ட்ரீம் வரிசை பைக் மாடல்களின் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஹீரோ இறங்கி இருக்கிறது.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

இதற்காக, புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். கொரோனாவால் இந்த பைக்கின் அறிமுகம் தள்ளிப்போய் வரும் நிலையில், தற்போது டீலர்களில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

இதனால், அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த புதிய பைக் மாடலை ஹீரோ சந்தைக்கு கொண்டு வந்துவிடும் என்று தெரிகிறது. நேக்கட் ரக பைக் மாடல்களை விரும்புவோருக்கு இந்த பைக் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.R என்ற கான்செப்ட் அடிப்படையில் இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், செவ்வக வடிவிலான இண்டிகேட்டர்கள், கருப்பு பின்னணியுடன் கூடிய டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய விஷயங்களாக இருக்கின்றன.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

இதன் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், வால் பகுதி ஆகியவை மிரட்டலாக இருக்கின்றன. இதனால், நேக்கட் ரக பைக் மாடல்களை விரும்புவோரின் கவனத்தை இந்த பைக் வெகுவாக ஈர்க்கும் வாய்ப்புள்ளது. மேலும், இந்த பைக் டியூவல் டோன் வண்ணக் கலவையில் சிங்கிள் சீட் அமைப்புடன் வர இருக்கிறது. இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் வழங்கப்படும் 160சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0 - 60 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும்.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 37 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும். முன்சக்கரத்தில் 276 மிமீ பெட்டல் டிஸ்க்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வர இருக்கிறது.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் மாடலானது சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொண்ட இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. வெள்ளை - சாம்பல், நீலம்- சாம்பல் மற்றும் சிவப்பு- சாம்பல் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மிரட்டும் டிசைனில் வரும் புதிய ஹீரோ பைக்!

சுஸுகி ஜிக்ஸெர் 150, யமஹா எஃப்இசட்16, பஜாஜ் பல்சர் என்எஸ்160 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில், மிக சவாலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hero MotoCorp have begun accepting registrations for test riding the Xtreme 160R ahead of its launch in India. Buyers looking to test ride the motorcycle can head over to the brand's official website to register for the test ride.
Story first published: Sunday, June 21, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X