ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் புதிய கஃபே ரேஸர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புத்தம் புதிய இன்ஜின் மற்றும் சேஸிஸ் உடன் இந்திய சந்தைக்காக புத்தம் புதிய ஒரு மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் கொண்டு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. எனவே இது ஒரு 'சர்ப்ரைஸ் லான்ச்' ஆகவே பார்க்கப்படுகிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் தற்போது இந்திய சந்தையில் வேகமாக பிரபலமாகி வருகிறது. ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு நேர் எதிர் போட்டியாக புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

இதன்படி ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதுதான் ஹோண்டா ஹைனெஸ் சிபி350. இந்த புதிய மோட்டார்சைக்கிள் கிளாசிக் ரெட்ரோ தோற்றத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளும் கலந்த கலவையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

இந்த சூழலில் ஹைனெஸ் சிபி350 பைக் அடிப்படையில் புதிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கும் பணிகளை ஹோண்டா நிறுவனம் செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

இது தொடர்பான தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே இருக்கும் என யூகிக்கப்படுகிறது. ஆனால் ரைடிங் எர்கோனாமிக்ஸ் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். எனினும் 348.4 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் மாற்றப்படாமல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 21.07 பிஎஸ் பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதனுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம். அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், ட்யூப்லெஸ் டயர்களுடன் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை 1.85 லட்ச ரூபாய் ஆகவும், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.90 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது புதிய கஃபே ரேஸர்?

ஆனால் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் கஃபே ரேஸர் மாடலின் விலை இதை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2.50 லட்ச ரூபாயையொட்டி விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
English summary
H’ness CB350 Based Cafe Racer Launch Expected 2021 - Price, Engine Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X