மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் அசத்தலான சாதனை..!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பி-டெக் மாணவர்கள் இருவர் காரின் எஞ்ஜின் மற்றும் பிற வாகனங்களின் பாகங்களைக் கொண்டு சூப்பர் பைக் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

வாகன மாடிஃபிகேஷன் உலகையே அதகளப்படுத்தும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த இரு பி-டெக் மாணவர்கள் பைக் ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர். பல வாகனங்களின் கலவையில் உருவாகியிருக்கும் இந்த பைக் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில், மிகவும் முரட்டுத்தனமாக காட்சியளிக்கின்றது.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

அதாவது, கார் மற்றும் பைக்குகளின் பாகங்களைக் கொண்டு இந்த சூப்பர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, பஞ்சாப் மாநிலம், போக்பூரில் உள்ள கெஹ்ரான் கிராமத்தைச் சேர்ந்த தேவிந்தர் சிங் (18 வயது) மற்றும் ஹர்சிம்ரங் சிங் (20 வயது) ஆகிய இருவர் குழுவே உருவாக்கியிருக்கின்றது.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

பி-டெக் படிப்பைப் படித்து வரும் இவர்கள் வாகனத்தின் மீதிருக்கும் அதீத ஆர்வத்தின் காரணமாக இந்த கலப்பினை பைக்கை உருவாக்கியிருக்கின்றனர். இதற்காக சுமார் 39க்கும் அதிகமான நாட்களை அவர்கள் செலவழித்து இருக்கின்றனர். மேலும், இதற்காக ரூ. 2 லட்சங்கள் வரை அவர்கள் செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

சரி வாருங்கள் இந்த பைக்கை உருவாக்க எந்தெந்த வாகனத்தின் என்னென்ன பாகங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதைப் பற்றி பார்க்கலாம். கலப்பின பைக்கில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மாற்றம் 'எஞ்ஜின்'. இதற்காக மாருதி 800 காரின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

இதேபோன்று, ரேடியேட்டர் மற்றும் கூலிங் ஃபேன் உள்ளிட்டவையும் வேறொரு வாகனத்தில் இருந்தே பெறப்பட்டு, பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை குட்டியானை எனப்படும் டாடா ஏஸ் மாடலுடையதாகும். அதுமட்டுமின்றி, ஃபூட் ரெஸ்டிற்காகவும் மஹிந்திரா பொலிரோவின் உடற்கூறே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

இவ்வாறு வெவ்வேறு வாகனங்களில் இருந்து பெறப்பட்ட பாகங்களைக் கொண்டே இந்த சூப்பர் பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் பஜாஜ் பல்சர் 220 மாடலின் சேஸிஸ்-இல் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆம், இந்த கலப்பின வேலை அனைத்தும் பஜாஜ் பல்சர் 220 மாடலிலேயே செய்யப்பட்டிருக்கின்றன.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

ஆனால், பெட்ரோல் டேங்க், மட்டுகுவார்ட் உள்ளிட்ட ஒரு சில பாகங்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஹெட்லேம்ப் மற்றும் மட்குவார்ட் ஆகியவை யமஹா எஃப்இசட் பைக்குடையதாகவும், செயின், ரிம் மற்றும் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்டவை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குடையதாகவும் காட்சியளிக்கின்றன.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

தொடர்ந்து, பின்பக்க மட்குவார்ட், இன்டிகேட்டர் உள்ளிட்டவை கேடிஎம் பைக்குகளில் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதேசமயம், பல்சர் 220 மாடலில் இருந்து சில பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிரேக், காலிபர்கள், முன்பக்க சஸ்பென்ஷன், ஹேண்டில் பார் மற்றும் இருக்கை ஆகியவை பல்சர் 220 மாடலுடையதாக காட்சியள்க்கின்றன.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

இவ்வாறு பல்வேறு வாகனங்களின் கலவையிலேயே சூப்பர் உருவாகியிருக்கின்றது. இதற்கு பி-டெக் மாணவர்கள்

டிரகுலா எஸ்-800 என்ற பெயரை வைத்திருக்கின்றனர். இந்திய மாணவர்களின் இந்த திறமை இந்திய இருசக்கர வாகனச் சந்தையே மெர்சலாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, வாகன மாடிஃபிகேஷன் உலகை இது மிரட்டும் வகையில் இருக்கின்றது.

மாருதி 800 எஞ்ஜினில் உருவாகிய சூப்பர் பைக்! செலவு ரொம்ப கம்மி! பி-டெக் மாணவர்களின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!

பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் மாருதி 800 காரின் எஞ்ஜின் பின் பக்க வீலுக்கு திறனை வழங்குகின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 200 முதல் 220 கிமீ வரை வேகத்தில் செல்லும். இதுமட்டுமின்றி, பைக் ரிவர்ஸில் செல்வதற்கும் இந்த எஞ்ஜின் உதவுகின்றது. அவ்வாறு ரிவர்ஸில் செல்லும்போது மணிக்கு 20 கிமீ என்ற வேகத்தில் அது பயணிக்கும்.

தற்போது நிலவி வரும் பொதுமுடக்கத்தைப் பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் பி-டெக் மாணவர்கள் இந்த பைக்கை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதை உருவாக்குவதற்காக தனியாக தங்களின் கிராமத்தில் ஓர் இடத்தை வாடகை எடுத்தே பைக்கை கட்டமைத்திருக்கின்றனர். இந்த இடத்திற்கு மாத வாடகையாக அவர்கள் ரூ. 35 ஆயிரம் வரை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Homemade Superbike Can Do 220 KPH: Made By B Tech Students. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X