புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் என்னென்ன புதுசு?

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரையில் விற்பனையில் இருந்த 5ஜி மாடலைவிட 6ஜி மாடலில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

டிசைன்

அப்ரான் எனப்படும் முன்புற பாடி பேனல் வடிவம் சற்றே சிறிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், கவர்ச்சி கூடியிருக்கிறது. அத்துடன், பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு சற்றே பெரிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

பரிமாணம்

பழைய மாடலைவிட வசதியான இருக்கை அமைப்பு மற்றும் ஃபுட்போர்டு அமைப்புடன் வந்துள்ளது. வண்டியின் நீளம் அதிகரிக்கப்பட்டு, அகலம் மற்றும் உயரம் சற்றே குறைக்கப்பட்டுள்ளது. புதிய டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் மூலமாக கிரவுண்ட் கிளியரன்ஸ் 18 மிமீ அதிகரிக்கப்பட்டாலும், தரையிலிருந்து இருக்கை உயரம் பழைய மாடலின் அளவிலேயே தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. வீல்பேஸ் நீளமும் 22 மிமீ அதிகரித்துள்ளது. கால் வைப்பதற்கான இடவசதி குறிப்பிடதக்க அளவு அதிகரித்துள்ளதும் வரவேற்கத்தக்க விஷயம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

பெட்ரோல் டேங்க் மூடி

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்தபடியே, பெட்ரோல் டேங்க் மூடி இருக்கைக்கு கீழ் இல்லாமல், வெளியில் இருந்தே திறந்து மூடும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ரிமோட் முறையில் திறக்கும் வசதி உள்ளதால், பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும்போது எளிதாக பெட்ரோல் நிரப்ப வழி வகை செய்யும். இருக்கையை திறக்கும் அவசியம் இருக்காது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

முன்புற சக்கரங்கள்

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 10 அங்குல முன்புற சக்கரம் இருந்தது. தற்போது 12 அங்குல சக்கரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சஸ்பென்ஷன் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

சிபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏற்கனவே இருந்தது போலவே, இரண்டு சக்கரங்களிலுமே 130 மிமீ டிரம் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு பிரேக்குகளும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக கட்டுப்படுத்தப்படுவதால், சிறப்பான பிரேக்கிங் திறனை பெற முடியும். பிரேக்கிங் சிஸ்டத்தில் மாற்றம் இல்லை.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

எஞ்சின்

ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்கூட்டரில் கார்புரேட்டர் கொண்ட 109 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டிருந்தது. இந்த நிலையில், தற்போது புரோகிராம்டு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட புதிய பிஎஸ்-6 எஞ்சினுடன் வந்துள்ளது. இது மிக சீரான செயல்திறனை வழங்குவதை உறுதி செய்யும்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

ஆனால், பழைய மாடலைவிட செயல்திறன் சற்றே குறைந்துள்ளது. அதாவது, புதிய பிஎஸ்-6 எஞ்சின் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

மைலேஜ்

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய பிஎஸ்-6 மாடல் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 10 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான உமிழ்வு திறனையும் பெற்றிருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர்

பழைய மாடலில் இருந்த செல்ஃப் மோட்டாருக்கு பதிலாக, ஏசிஜி என்ற புதிய ஸ்டார்ட்டர் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது சப்தம் இல்லாமல் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதியை அளிக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

எல்இடி விளக்குகள்

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், மல்டி ஃபங்ஷன் கீ சிஸ்டம், எஞ்சினை நிறுத்துவதற்கான பிரத்யேக சுவிட்ச், 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ஸ்பேஸ் இடவசதி ஆகிய வசதிகள் முக்கியமானதாக கூறலாம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

விலை

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.63,912 விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ.65,412 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள்: வேறுபாடுகள் என்னென்ன?

விலை வித்தியாசம்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்டான்டர்டு வேரியண்ட்டின் விலை ரூ.7,978 வரையிலும், டீலக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.7,613 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இது கணிசமான விலை உயர்வு என்றாலும், புதிய ஹோண்டா 6ஜி ஸ்கூட்டர் பல மதிப்பு வாய்ந்த அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Here are some of the differences between the 6G and the previous Activa 5G model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X