20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்!

சிறந்த தேர்வு

ஒவ்வொரு வாகன ரகத்திலும் குறிப்பிட்ட மாடல் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும். அந்த வகையில், இந்தியாவின் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தன்னிகரில்லா தேர்வாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. ஸ்கூட்டர் மாடல்கள் ஒதுக்கப்பட்டு, பைக்குகளின் பக்கம் கவனம் திரும்பிய நிலையில், ஆக்டிவா தனக்கென தனிப்பாதை வகுத்துக் கொண்டதோடு, ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வர்த்தக வாய்ப்பை இந்தியாவில் பலப்படுத்தியது.

20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்!

ஸ்பெஷல் எடிசன் மாடல்

இந்த நிலையில், இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இத்தனை ஆண்டு சகாப்தத்தை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்!

தனித்துப்படுத்தும் விஷயங்கள்

ஸ்பெஷல் எடிசன் ஆக்டிவா ஸ்கூட்டர் பல தனித்துவமான அம்சங்களுடன் வந்துள்ளது. மேட் மெச்சூர் பிரவுன் என்ற விசேஷ பழுப்பு வண்ணத் தேர்விலும், பியர்ல் நைட் பிளாக்ஸ்டார் என்ற வண்ணத் தேர்விலும் இந்த ஸ்பெஷல் எடிசன் ஆக்டிவா வந்துள்ளது. மேலும், தங்க வண்ணத்தில் ஆக்டிவா பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ண சக்கரங்களும் இந்த ஸ்கூட்டருக்கு தனி வசீகரத்தை கொடுக்கிறது. இதனால், சாதாரண ஆக்டிவா ஸ்கூட்டர் கூட்டத்திலிருந்து இந்த மாடல் மிகவும் தனித்துவமாக இருக்கும்.

20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்!

எஞ்சின்

புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் 110சிசி எச்இடி தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் சப்தமில்லாமல் செல்ஃப் ஸ்டார்ட் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பமும் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் உள்ளன. 12 அங்குல முன்புற சக்கரம் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்!

விலை விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஸ்டான்டர்டு மாடலுக்கு ரூ.66,816 விலையும், டீலக்ஸ் மாடலுக்கு ரூ.68,316 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Honda Motorcycles and Scooters limited has launched Activa 6G 20th-anniversary special edition model in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X