விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் பிரபலமான யூனிகார்ன் 160 பைக் மாடல்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்க கடந்த சில வாரங்களாக அதன் எஸ்பி125, ஹார்னெட் 2.0, ஆக்டிவா 6ஜி, சிடி 110 ட்ரீம் மற்றும் க்ரேஸியா 125 மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

இந்த வரிசையில் தற்போது புதியதாக யூனிகார்ன் மோட்டார்சைக்கிள் இணைந்துள்ளது. ஹோண்டாவினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின்படி யூனிகார்ன் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5 ஆயிரம் வரையிலான பணம் தள்ளுபடியை பெற முடியும்.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த பணம் தள்ளுபடி சலுகையை பெற வாடிக்கையாளர் ஹோண்டாவின் கூட்டணி வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் வாயிலாக யூனிகார்ன் பைக்கை வாங்க வேண்டும். இதே நிபந்தனைதான் மேற்கூறப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

இவற்றுடன் பைக்கை எளிமையாக சொந்தமாக்க சில மாதத்தவணை நிதி திட்டங்களும் ஹோண்டா நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. யூனிகார்ன் மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக், பேர்ல் இக்னியஸ் ப்ளாக் மற்றும் இம்பெரீயல் சிவப்பு மெட்டாலிக் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

இவற்றில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 162.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் ஹோண்டாவின் ஈக்கோ தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 12.73 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலஸ்கோபிக்கும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் செட்அப்பும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் முன் & பின் சக்கரத்தில் முறையே 240மிமீ மற்றும் 130மிமீ-ல் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி இறைக்கும் ஹோண்டா!! யூனிகார்ன் பைக்கிற்கு ரூ.5,000 வரையில் பணம் தள்ளுபடி

ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.95,152 ஆக தற்சமயம் உள்ளது. சமீபத்தில்தான் இதன் விலையை தயாரிப்பு நிறுவனம் ரூ.955 அளவில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Honda 2Wheelers India Offers Cashback Of ₹ 5,000 On The BS6 Unicorn 160
Story first published: Thursday, December 31, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X