ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

ஹோண்டா சிடி110 மோட்டார்சைக்கிளிற்கான புதிய குறுகிய கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த சலுகை திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் சிடி110 பைக்கை க்ரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டை உபயோகப்படுத்தி மாதத்தவணையில் வாங்கவதின் மூலம் ரூ.5,000 பணத்தை சேமிக்க முடியும்.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

அதாவது ரூ.5,000 பைக்கை வாங்கிய பின்பு கேஸ்பேக் (Cashback)ஆக திரும்ப கிடைக்கும். இதற்கு அந்த வாடிக்கையாளர் ஹோண்டா கூறியுள்ள அந்த கூட்டணி நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

அதுமட்டுமின்றி இந்த சலுகை ஹோண்டா சிடி110 பைக்கின் டீலக்ஸ் வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இருப்பினும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

இதனால் ஹோண்டா சிடி110 டீலக்ஸ் பைக்கை வாங்க நினைப்பவர்கள் உடனே அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் மையத்தை தொடர்பு கொள்ளவும். டீலக்ஸ் மட்டுமின்றி ஸ்டாண்டர்ட் என்ற வேரியண்ட்டிலும் ஹோண்டா சிடி110 விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

இதில் டீலக்ஸ் என்பதுதான் அதிக விலை கொண்ட வேரியண்ட்டாகும். இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.64,508 மற்றும் ரூ.65,508 என உள்ளன. ஆனால் இந்த புதிய சலுகையின்படி சிடி110 டீலக்ஸ் பைக்கை ரூ.60,508 என்ற விலையில் சொந்தமாக்கி கொள்ளலாம்.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

அன்றாடம் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற வாகனமான ஹோண்டா சிடி110 பைக்கில் 109.51சிசி, சிங்கிள்-சிலிண்டர் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. ஏர்-கூல்டு என்ஜினான இதில் ஹோண்டாவின் மேம்பட்ட ஸ்மார்ட் பவர் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிடி110 பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்!! ரூ.5000-ஐ மிச்சப்படுத்தலாம்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 9.10 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 9.30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. என்ஜினின் அமைதியான ஸ்டார்ட்க்கு ஏசிஜி தொழிற்நுட்பம் இந்த பைக்கில் சிறப்பம்சமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
New Honda CD 110 offer announced - Get cashback of up to INR 5,000
Story first published: Saturday, December 12, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X