ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

ஹோண்டா சூப்பர் 6 ஆஃபர் என்ற பெயரில் இந்த பண்டிகை கால ஆஃபர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் தள்ளுபடி மற்றும் சிறப்பு கடன் திட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஹோண்டா பைக், ஸ்கூட்டர்கள் மீது அதிகபட்சமாக 11,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறலாம். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்களுக்கு இந்த சேமிப்பு பொருந்தும்.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

பண்டிகை காலத்தில் புதிய வாகனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனால், இந்த நேரத்தில் அதிக ஆஃபர்களை வழங்கி, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்கு அனைத்து வாகன நிறுவனங்களும் போட்டா போட்டியில் இறங்கி உள்ளன.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹோண்டா தனது இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

ஹோண்டா சூப்பர் 6 ஆஃபர் என்ற பெயரில் இந்த பண்டிகை கால ஆஃபர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் தள்ளுபடி மற்றும் சிறப்பு கடன் திட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்கள் மீது அதிகபட்சமாக 11,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறலாம். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்களுக்கு இந்த சேமிப்பு பொருந்தும். ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மற்றும் ஷைன், லிவோ, யூனிகார்ன் பைக்குகளுக்கும் சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

இதுதவிர்த்து, தனது தயாரிப்புகளுக்கு விலையில் 100 சதவீத கடன் திட்டம், 7.99 சதவீத கடன் திட்டம் மற்றும் கேஷ் பேக் சேமிப்புடன் கூடிய 50 சதவீதம் வரை மிக குறைவான மாதத் தவணை திட்டம், பேடிஎம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான சேமிப்பு என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

மேலும், இந்தஸ் இந்த் வங்கி, முத்தூட் ஃபைனானஸ், சோழா மற்றும் டாடா கேபிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு கடன் திட்டங்கள், சேமிப்பையும் ஹோண்டா வழங்குகிறது.

ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால ஆஃபர்!

இந்த திட்டங்கள் மூலமாக பண்டிகை காலத்தில் சிறப்பான விற்பனையை பதிவு செய்ய முடியும் என்று ஹோண்டா கருதுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் பலன் தரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
ஹோண்டா பண்டிகை கால சலுகைகள், ஹோண்டா ஸ்கூட்டர்களுக்கு சேமிப்புச் சலுகைகள், ஹோண்டா பைக் மாடல்களுக்கு சேமிப்புச் சலுகைகள்
Story first published: Wednesday, October 14, 2020, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X