புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் 2.0 என்ற புதிய பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சந்தைப் போட்டி நிறைந்த 200சிசி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

இந்தியாவின் 160சிசி பைக் மார்க்கெட்டில் ஹார்னெட் பைக் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்தது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, அந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஹார்னெட் பைக் 200சிசி எஞ்சின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

இந்த புதிய பைக் மாடலானது ஹார்னெட் 2.0 என்ற பெயரில் வந்துள்ளது. ஃபேரிங் பேனல்கள் இல்லாமல் தேகத்தை காட்டும், நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் உடல் அமைப்பு ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் மாடல் மிக வசீகரமான டிசைன் அம்சங்களுடன் கவர்ந்து இழுக்கிறது. முக்கோண வடிவிலான கூர்மையான முக அமைப்பு, முறுக்கலான தேகம் போன்ற பெட்ரோல் டேங்க், ஸ்டெப் அப் இருக்கைகள், கருப்பு வண்ண பூச்சுடன் எஞ்சின் மற்றும் சைலென்சர், கச்சிதமான வால் பகுதியுடன் இளைஞர்களை சுண்டி இழுக்கும் டிசைன் அம்சங்ளை பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்சிடி திரையுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தங்க வண்ண முலாம் பூச்சுடன் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், முன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் 184 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 எச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

போட்டியாளர்களை ஒப்பிடும்போது, இதன் எஞ்சின் வெளிப்படுத்தும் சக்தி குறைவாக இருப்பது ஏமாற்றம் தரும். அதேநேரத்தில், மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் எஞ்சின், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் தொழில்நுட்பம் ஆகியவை வாடிக்கையாளர்களை சமரசப்படுத்தும். இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மட்டுமே இருப்பதும் மற்றொரு குறையாக கருதப்படுகிறது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

இந்த பைக் பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் சங்கிரியா ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் ஆகிய 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கிற்கு ரூ.1.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு ஆன்லைன் மற்றும் டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுகிறது. கேடிஎம் 200 ட்யூக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கிற்கு 6 ஆண்டுகள் வாரண்டி திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 3 ஆண்டுகள் ஸ்டான்டர்டு வாரண்டியாகவும், 3 ஆண்டுகள் கூடுதல் கால வாரண்டி திட்டமாகவும் தேர்வு செய்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda has launched new Hornet bike with 200cc engine in India and priced at Rs.1.26 Lakh (Ex-Showroom).
Story first published: Thursday, August 27, 2020, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X