இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அப்டேட் செய்துள்ளது. இதில் சிபி ஹார்னெட் 160ஆர், எக்ஸ்ப்ளேட் மற்றும் சிபிஆர்250ஆர் என்ற மூன்று பைக் மாடல்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

இதனால் ஹோண்டாவின் இணையத்தள பக்கம் முழுக்க பிஎஸ்6 மாடல்களால் நிரம்பியுள்ளது. இந்நிறுவனத்தின் சிறப்பான விற்பனை பைக்கான சிபி ஹார்னெட் 160ஆர் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படாதது தான் ஆச்சிரியமளிக்கிறது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

இதன் அப்டேட் பணிகளின் தாமதத்திற்கு நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தான் காரணம். இதனால் தற்சமயம் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் முதல் வேலையாக சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் பிஎஸ்6 அப்டேட் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

தற்போது விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ள மற்ற இரு பைக் மாடல்களான எக்ஸ்ப்ளேட் மற்றும் சிபிஆர்250ஆர், பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்படாததற்கு கொரோனா வைரஸ் பரவலை விட இவற்றின் குறைவான விற்பனை நிலவரமே மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

இருப்பினும் ஹோண்டா நிறுவனம் எக்ஸ்ப்ளேட் மாடலின் பிஎஸ்6 வெர்சனை சற்று தோற்ற மாற்றங்களுடன் ஆண்டு இறுதியில் வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகப்படுத்தும் என கூறப்பட்டு வருகிறது. இதன் தற்போதைய மாடலில் 162.7சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.91 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பைக்கின் விற்பனையை வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இந்நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபி யூனிகார்ன் 150 பைக்குகள் தான் வெகுவாக குறைத்து வருகின்றன.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் எக்ஸ்ப்ளேட் மாடலில் உள்ள அதே 162.7சிசி என்ஜினை தான் ஹோண்டா நிறுவனம் வழங்கிவந்தது. ஆனால் இந்த என்ஜின் சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் சிறிது கூடுதலாக 15 பிஎச்பி பவரையும் 14.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

3 வேரியண்ட்கள் மற்றும் 5 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த 160சிசி ஹோண்டா பைக்கின் ஆரம்ப விலை ரூ.92,661 ஆகவும், அதிகப்பட்சமாக ரூ.97,203 ஆகவும் இருந்தது. இவை இரண்டை விட அளவில் பெரியதான சிபிஆர்250ஆர் சந்தையில் ரூ.1,67,070 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

இதில் பொருத்தப்பட்ட 249.6சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 25.7 பிஎச்பி பவரையும், 22.9 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இதன் என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

ஹோண்டாவின் இந்த மூன்று பைக் மாடல்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு இவை விற்பனை செய்யப்படாது. எப்போது இவற்றின் பிஎஸ்6 வெர்சன்களின் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகிறதோ அப்போது தான் இவை மீண்டும் இந்நிறுவனத்தால் இணையத்தில் சந்தைப்படுத்தப்படும்.

Most Read Articles
English summary
Honda CB Hornet, Xblade, CBR250R removed from official website
Story first published: Tuesday, April 14, 2020, 14:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X