வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

ஹோண்டா நிறுவனம் சிபி125ஆர்-ன் அடிப்படையில் புதிய எலக்ட்ரிக் பைக்கின் தயாரிக்கும் நோக்கத்தில் இருப்பதை வெளிக்காட்டும் விதமாக புதிய காப்புரிமை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

எலக்ட்ரிக், இந்திய போக்குவரத்தின் எதிர்கால தீர்வாகும். ஏனெனில் இப்போதே சந்தையிலும் சரி, சாலையிலும் சரி எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நம்பவில்லை என்றால், கடந்த 2-3 வருடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் & பைக் தயாரிப்பில் எத்தனை புதிய நிறுவனங்களின் பெயர்கள் பதிவு செய்யபட்டுள்ளன என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி தயாரிப்புகளை பல வருடங்களாக இந்தியாவில் சந்தைப்படுத்தி வருவபவையும் புதிய ப்ளாட்ஃபாரம், புதிய எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு என தங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

இந்த வகையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள சிபி125ஆர் பைக்கின் அடிப்படையில் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான காப்புரிமை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

இந்த படங்கள் வெளியாகியுள்ளதன் மூலம் ஹோண்டா நிறுவனம் எலக்ட்ரிக் பைக்கின் தயாரிப்பில் ஈடுப்படவுள்ளது உறுதியாகுகிறது. மேலும் வழக்கமான சிபி125ஆர் பைக்கின் சைக்கிள் மற்றும் சேசிஸ் பாகங்களுடன் தான் இந்த எலக்ட்ரிக் பைக் உருவாகவுள்ளதையும் இந்த படங்களின் மூலமாக அறிய முடிகிறது.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

இந்த காப்புரிமை படங்களில் பைக் கிட்டத்தட்ட அனைத்து விதமான பாகங்களையும் பெற்றுள்ளது. இதனால் ஹோண்டா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான தயாரிப்பு பணிகளை இந்நேரம் ஆரம்பித்திருக்க வேண்டும் அல்லது ஹோண்டாவின் ஆராய்ச்சி & வடிவமைப்பு பிரிவு பைக்கை வடிவமைக்கும் பணியினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

படங்கள் தவிர்த்து பைக்கின் பெயரை கூட இதுவரை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை. இது சிபி125ஆர் பைக்கின் அடிப்படையில் உருவாகும் பைக் என்பதையே நாங்கள் படத்தில் பைக்கின் உருவத்தையும், தோற்றத்தையும் வைத்து தான் கூறுகின்றோம்.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

இந்த படங்களை வைத்து பார்க்கும்போது பைக்கில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார், மிகவும் மெல்லியதாக பெரிய விட்டத்தில் பேன்கேக்-ஸ்டைலை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஹோண்டாவின் இந்த எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்படவுள்ள ப்ளாட்ஃபாரம் ஏற்கனவே குறிப்பிட்ட செயல்திறனை வழங்கும் வகையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

புதிய ஹோண்டா எலக்ட்ரிக் பைக் இயங்கும் திறனும் வழக்கமான சிபி125ஆர் பைக்கில் இருந்து பெரிய அளவில் வேறுப்பட்டதாக இருக்காது. தற்போதைய சிபி125ஆர் அதிகப்பட்சமாக 13 பிஎச்பி ஆற்றலில் இயங்குகிறது. இதன் அதிகப்பட்ச வேகம் 130kmph ஆகும்.

வேகமாக தயாராகிவரும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக்... சிபி125ஆர்-ன் அடிப்படையில் உருவாகுகிறது...!

இதே ஆற்றல் அளவில் தான் புதிய எலக்ட்ரிக் பைக் எதிர்பார்க்கப்பட்டாலும், பைக்கின் ஆரம்ப நிலை முடுக்கம் (ஆக்ஸலரேஷன்) சற்று விரைவாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் பைக் குறித்து வெளியாகிவரும் தகவல்களில் வழக்கமான சிபி125ஆர் பைக்கில் இருந்து 75 சதவீத பாகங்களை அப்படியே இந்த எலக்ட்ரிக் பைக் பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda CB125R Based Electric Motorcycle Launch Planned – Patent Images Leak
Story first published: Thursday, August 20, 2020, 1:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X