ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

ஜப்பானிய மோட்டர்சைக்கிள் ப்ராண்ட்டான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் சிபி300ஆர் பைக் மாடலின் பெயரை அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

ஹோண்டா இந்தியா நிறுவனம் சிபி300ஆர் பைக் மாடலை கடந்த 2019 பிப்ரவரி மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. ‘நியோ-ரெட்ரோ' ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் மாடலான இதன் ஆரம்ப விலை ரூ.2.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

சிபி1000ஆர் பைக்கின் மினி பைக்காக வெளிவந்த சிபி300ஆர் பிரத்யேகமான ஹோண்டா விங் வோர்ல்டு அவுட்லெட்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிஎஸ்4 தரத்தில் சிகேடி முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டதே இதன் அதிகப்படியான விலைக்கு காரணம்.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

இருப்பினும் அறிமுகத்திற்கு முன்னதாக தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த 500 யூனிட்கள் விற்பனையை இந்த பைக் சில மாதங்களில் கடந்துவிட்டது. இந்த நேரத்தில் தான் சிபி300ஆர் பைக் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாக வதந்திகள் வெளிவந்தன.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

ஆனால் கடைசி வரையில் இதுவும் நடக்கவில்லை பைக் பிஎஸ்6 தரத்திற்கும் அப்டேட் செய்யப்படவில்லை. எப்படியிருந்தாலும் விரைவில் பிஎஸ்6 தரத்தில் இந்த பைக் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

தற்போது இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள சிபி300ஆர் பைக் ஆனது சிபிஆர்650ஆர்-ல் இருந்து கோல்டு விங் டூரர் வரையிலான பைக்குகள் உள்ள இந்நிறுவனத்தின் சூப்பர் பைக் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

க் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

பிஎஸ்4 தரத்தில் சிபி300ஆர் பைக்கில் 286சிசி லிக்யூடு-கூல்டு டிஒஎச்சி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 30 பிஎச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்-ல் 27.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் (ஸ்லிப்பர் க்ளட்ச் இல்லை) இந்த என்ஜின் இணைக்கப்படுகிறது.

ஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...?

மற்றப்படி அதிகளவில் எந்த தொழிற்நுட்பங்களையும் கொண்டில்லாவிட்டாலும், ஐஎம்யூ உடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ்-ஐ இந்த பைக் பெற்றுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் பிஎஸ்6 தரத்தில் இந்த பைக் தற்சமயம் கேடிஎம் 390 ட்யூக், பஜாஜ் டோமினார் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் ஆதிக்கம் செலுத்திவரும் 250-300சிசி பைக் பிரிவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கலாம்.

Most Read Articles

English summary
Honda CB300R Unlisted From Website: BS6 Model Expected To Arrive Soon?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X