இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

2021ஆம் ஆண்டிற்கான ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்ரிக்கா ட்வின் பைக்குகள் புதிய நிற தேர்வுகளை பெற்றுள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

ஜப்பானை நாட்டை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1100சிசி ஆப்ரிக்கா ட்வின் பைக்குகளை இந்தியா உள்பட பல வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

அட்வென்ஜெர் டூரர் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற இந்த ட்வின் பைக்குகள் இனி பளபளப்பான முத்தின் வெள்ளை ட்ரைகலர் பெயின்ர் அமைப்பில் கிடைக்கும். இதுமட்டுமின்றி ‘சிஆர்எஃப்' கிராண்ட் ப்ரிக்ஸ் சிவப்பு மற்றும் மேட் பாலிஸ்டிக் ப்ளாக் மெட்டாலிக் என்ற புதிய நிறங்களுக்கும் இந்த ஹோண்டா பைக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

இவற்றில் பளபளப்பான முத்தின் வெள்ளை ஏற்கனவே இவற்றின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கு வழங்கப்பட்டுவருகிறது. மற்றப்படி புதிய பெயிண்ட் அமைப்புகளில் மாற்றங்கள் மிகவும் குறைவாகவே கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்குகள் ஏற்கனவே யூரோ5/பிஎஸ்6 அப்கிரேட்களை பெற்றுவிட்டன. இந்த மேம்படுத்தப்பட்ட பைக்குகளில் 1,084சிசி, இணையான-இரட்டை சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் 7,500 ஆர்பிஎம்-ல் 102 பிஎச்பி பவரையும், 6,250 ஆர்பிஎம்-ல் 105 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

அதுவே பிஎஸ்4 தரத்தில் அதே 7,500 ஆர்பிஎம்-ல் 86.04 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 93.1 என்எம் டார்க் திறனை மட்டுமே இந்த என்ஜின் பைக்கிற்கு வழங்கியது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

இவற்றின் எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்பில் கார்னரிங் ஏபிஎஸ், பின்புற-லிஃப்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், டிசிடி கார்னரிங் கண்டறிதல் மற்றும் கார்னரிங் விளக்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் உடன் வருகிறது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...

இதுமட்டுமின்றி நீண்ட விண்ட்ஸ்க்ரீன் மற்றும் அகலமான என்ஜின் அடிப்பகுதியை பாதுகாக்கும் பாதுகாப்பான் போன்றவற்றையும் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து கூடுதலாக பெறுகிறது. ட்யூப்லெஸ் டயர்களை வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் கொண்டுள்ள இந்த ஹோண்டா பைக்குகளின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் 6.5 இன்ச்சில் புதிய டிஎஃப்டி தொடுத்திரை பெற்று வருகிறது.

Most Read Articles

English summary
2021 Honda Africa Twin gets a new colour option
Story first published: Wednesday, October 7, 2020, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X