20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

ஹோண்டா நிறுவனம் வெறும் 20 நாட்களில், 1,000 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஹைனெஸ் சிபி350 கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிளை, ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என உண்மையில் யாருமே எதிர்பார்க்கவில்லை. மிகவும் சர்ப்ரைஸாக இந்த பைக்கை அறிமுகம் செய்து, ஹோண்டா நிறுவனம் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேரடியாக போட்டியாக விற்பனைக்கு வந்துள்ள ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஹோண்டா நிறுவனம் இன்று (நவம்பர் 12ம் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

ஆம், ஹோண்டா நிறுவனம் வெறும் 20 நாட்களில், 1,000 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

அதற்குள்ளாக தற்போது 1,000 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன. இது உண்மையில் ஹோண்டா நிறுவனத்திற்கு குறிப்பிடத்தகுந்த சாதனைதான். ஏனெனில் ஹைனெஸ் சிபி350 முற்றிலும் புத்தம் புதிய மாடல் ஆகும். அத்துடன் ஹோண்டா நிறுவனத்தின் வழக்கமான ஷோரூம்கள் வாயிலாக, ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

அதற்கு மாறாக ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் பிக்விங் (BigWing) ஷோரூம்கள் வாயிலாக மட்டுமே ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்கள் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

இப்படிப்பட்ட சூழலில் இவ்வளவு குறுகிய காலத்தில் 1,000 யூனிட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்திருப்பது ஹோண்டா நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய விஷயம்தான். ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில், 346 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 21 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மட்டுமல்லாது, தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 நேரடி போட்டியாக இருக்கும். ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தும் செக்மெண்ட்டில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 களமிறக்கப்பட்டுள்ளது.

20 நாட்களில் 1,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை டெலிவரி செய்த ஹோண்டா... ராயல் என்பீல்டுக்கு நெருக்கடி

டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் கிடைக்கும். இதில், டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை 1.85 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.90 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Honda Delivers 1,000 Units Of H’ness CB350 Retro Cruiser Motorcycles In 20 Days - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X