புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடலில் சில டிசைன் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை வெளிக்காட்டும் விதமான இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் டீசர் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த 2020 டியோ மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரின் ஸ்போர்டியர் வெர்சனாக ஹோண்டா டியோ மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோண்டா ஆக்டிவா மாடல் பெரும்பான்மையான இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிவிடி ஸ்கூட்டராக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

ஆனால் டியோ மாடலோ முழுக்க முழுக்க இளம் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவதற்காக கூர்மையான தோற்றத்தில் வடிவமைப்பை பெற்றிருந்தது. இவற்றுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 2020 டியோ ஸ்கூட்டருக்கு அதிகளவில் கூர்மையான மற்றும் கருமை நிறத்தில் பாகங்களை கொண்ட திருத்தியமைக்கப்பட்ட டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

முழு-எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்கள் உள்பட முக்கியமான சில பாகங்கள் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தாலும், மொத்தமாக தீம் அமைப்பை பார்த்தால், ஒரிஜினல் மாடலுடன் கணக்கச்சிதமாக ஒத்துப்போகிறது.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

இவற்றுடன் புதிய க்ராஃபிக்ஸ் பேட்டர்ன்ஸ் மற்றும் பெயிண்ட் அமைப்பும் இந்த 2020 பிஎஸ்6 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டதால், ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் தான் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

புதிய டியோ மாடலில் கொடுக்கப்பட்டுள்ள 109.51சிசி பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 7.6 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இதன் பிஎஸ்4 என்ஜினுடன் ஒப்பிடும்போது இந்த வெளியிடு ஆற்றல் அளவு சிறிது குறைவாகும். தற்போதைய டியோ ஸ்கூட்டரின் பிஎஸ்4 என்ஜின் 8 பிஎச்பி பவர்/9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

இதனால் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரில் சிறப்பான எரிபொருள் திறனை நிச்சயம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த புதிய பிஎஸ்6 மாடலில் ஹோண்டா நிறுவனத்தின் எச்இடி (ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி) சிஸ்டம் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டம்மிள் தொழிற்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

டியோ போன்ற குறைவான தூர பயணத்திற்காக பயன்படுத்தும் பெரும்பாலான வாகனங்கள் பிஎஸ்6 அப்டேட்டால் தேவையான அளவிற்கு மட்டும் ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜினை பெற்றுள்ளன. ஆனால் இத்தகைய மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை வாங்குவோரில் பெரும்பகுதியினர் என்ஜினின் சிறப்பம்சம் உள்ளிட்டவற்றை எல்லாம் கவனிப்பதில்லை.

புள்ளிங்கோகளுக்கு பிடித்த டிசைனில் புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6..! புதிய டீசர் வெளியீடு..!

அவர்களது நோக்கம் முழுவதும் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் உரிமையாளர் ஆகுவதற்கான தொகை போன்றவற்றின் மீது தான் இருப்பது சிறு வருத்தமே. தற்போதைய ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பிஎஸ்4 வெர்சன் ரூ.53,000- ரூ.60,000 வரையில் இந்திய எக்ஸ்ஷோரூமில் விலை மதிப்பை பெற்றுள்ளது.

ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் என இரு வேரியண்ட்களில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர் பிஎஸ்6 மாற்றத்தால் ரூ.5,000 வரையில் விலை உயர்வை பெறவுள்ளது. இந்த பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஹோண்டா டியோவிற்கு சந்தையில் முக்கிய போட்டி மாடல்களாக யமஹா ரே-இசட் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் உள்ளன.

Most Read Articles
English summary
Honda Dio BS6 scooter teased – Gets Activa 6G BS6 engine
Story first published: Tuesday, February 4, 2020, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X