ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பிரம்மாண்ட தோற்றத்தை பெற்றிருக்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் மேலை நாடுகளில் பிரபலமாக உள்ளன. நீண்ட தூர பயணங்களுக்கும் இவை ஏற்றதாக இருக்கின்றன. இந்த நிலையில், மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

இதன் காரணமாக, மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஆக்டிவா, டியோ மூலமாக நம்பர்-1 இடத்தில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலையும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

MOST READ: பிஎஸ்6 எஞ்சின் மற்றும் புதிய பொலிவில் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

தனது ஃபோர்ஸா 300 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் கொண்டு வர இருப்பதாக ஹோண்டா ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழலால் பல நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதை ஒத்திபோட்டு வருகின்றன.

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஃபோர்ஸா 300 ஸ்கூட்டரை திட்டமிட்டபடி கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆட்டோ எக்கனாமிக் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஹோண்டா விற்பனைப் பிரிவு அதிகாரி யத்வீந்தர் சிங் குலேரியா,"புதிய மாடல்களின் அறிமுகங்களை திட்டமிட்டபடி கொண்டு வர இருக்கிறோம்.

MOST READ: டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

அதில் எந்த மாற்றமும் இருக்காது. நடப்பு நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாடல்கள் குறித்த நேரத்தில் அறிமுகம் செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

இதனால், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி, புதிய ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் மாடலானது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது அக்டோபர் முதல் மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: வெறும் 250 ரூபாயில் கார்களில் கிருமிநீக்கம் செய்து தரும் விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ்!

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

அதேநேரத்தில், புதிய ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுமா அல்லது இறக்குமதி செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனிடையே, ஏற்கனவே 4 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால்,விலை விபரம் குறித்த தகவல் இல்லை.

ஹோண்டா ஃபோர்ஸா 300 மேக்ஸி ஸ்கூட்டர் திட்டமிட்டபடி இந்தியாவில் அறிமுகமாகிறது

ஹோண்டா ஃபோர்ஸோ 300 ஸ்கூட்டரில் 279 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 25 பிஎஸ் பவரையும், 27.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், விண்ட் ஸ்கிரீன் அமைப்பு உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

Most Read Articles

English summary
According to report, Honda is planning to launch Forza 300 scooter in India current financial year.
Story first published: Wednesday, June 10, 2020, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X