ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! 5 முக்கிய தகவல்கள்!

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டர், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பைக்கையை ஓரம் கட்டும் வகையிலான திறனைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

பைக்கின் உருவத்தை ஒத்த தோற்றமுடைய மேக்ஸி ரக ஸ்கூட்டர் தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஃபோர்ஸா எனும் பிராண்ட் பெயரில் அந்த ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாடலின் தேர்வை அதிகரிக்கச் செய்யும் விதமாக ஃபோர்ஸா 750 மாடலை ஹோண்டா அண்மையில் அறிமுகப்படுத்தியது.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் ஹோண்டா ஃபோர்ஸாவின் 350 மாடலே இன்னும் அறிமுகம் செய்யப்படாதநிலையில் 750 மாடலை அந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. விரைவில் 350 இந்தியாவில் அறிமுகமாவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளன. ஆனால், ஃபோர்ஸா 750 அறிமுகம் பற்றிய தகவல் இதுவரை வெளிவரவில்லை.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இருப்பினும், இந்த ஸ்கூட்டர் வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். ஆம், இது ஓர் 750 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆகும்.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இந்த ஸ்கூட்டரை மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியிலேயே ஹோண்டா களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் கடந்த காலங்களில் ஸ்கூட்டர் பற்றிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது ஃபோர்ஸா 750 பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இன்டர்செப்டாரை விட அதிக திறன் கொண்டது:

ஹோண்டா ஃபோர்ஸா 750 ஸ்கூட்டரில் 745 சிசி திறன் கொண்ட லிக்யூடு-கூல்டு எஸ்ஓஎச்சி பேரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 58.6 பிஎஸ் மற்றும் 69 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது, இன்ட்ர்செப்டார் 650-ஐ விட மட்டுமில்லைங்க ஹோண்டா சிபிஆர் 650ஆர் பைக்கைக் காட்டிலும் அதிக திறன் ஆகும். இந்த பைக்குகளில் 650 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

வெறித்தனமான அம்சங்கள்:

ஃபோர்ஸா 750 ஸ்கூட்டரில் எக்கச்சக்கமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. டிராக்சன் கன்ட்ரோல், எஞ்ஜின் பிரேக்கிங் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் வசத மற்றும் 4 விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ரைடிங் மோட்கள்; ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட், மழை மற்றும் பயனாளர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இந்த அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக 5 இன்ச் அளவிலான வண்ண டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டதாகும். இந்த இணைப்பு வசதிமூலம் செல்போனை இணைக்க முடியும். அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு தகவல்களை நம்மால் செல்போன் வாயிலாகவே பெற முடியும்.குறிப்பாக ஸ்கூட்டர் இருக்குமிடத்தை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும்.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இதுதவிர, சில குறிப்பிட்ட அம்சங்களை செல்போன் ஆப் உதவியுடன் கட்டுப்படுத்தவும் முடியும். தொடர்ந்து, குரல் கட்டளை வசதியும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதே வசதிகளை அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான ஹைனெஸ் சிபி350 பைக்கிலும் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், சாவி இல்லாமல் பயன்படுத்தும் வசதி, எல்இடி மின் விளக்குகள் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்டு உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

தந்திரமான டிரான்ஸ்மிஷன்:

ஃபோர்ஸா 750 ஸ்கூட்டரில் வழக்கமான சிவிடி கியர்பாக்ஸிற்கு பதிலாக டிசிடி (ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்) கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸின் மூலமாகவே பின்பக்க சக்கரங்களுக்கு தேவையான திறன் கடத்தப்படுகின்றது. இது ஓர் நடுத்தர ஆட்டோமேட்டிக் சிஸ்டம் ஆகும். ஆகையால் இதில் பயணிக்கும்போது பைக்குகளில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும்.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

ஸ்கூட்டரின் போர்வையில் ஒளிந்திருக்கும் மோட்டார்சைக்கிள்:

இது ஒரு ஸ்கூட்டராக இருக்கலாம். ஆனால், ஃபோர்ஸாவில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான அம்சங்கள் பைக்குகளுக்கு இணையானதாக இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பைக்குகளையே மிஞ்சும் அம்சங்களை ஃபோர்ஸா 750 பெற்றிருக்கின்றது. அந்தவகையில் சிறப்பான சஸ்பென்ஷனுக்காக 41 மிமீ கோல்டன் அப்சைடு டவுண் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, தரமான பிரேக்கிங் வசதிக்காக 310 மிமி டிஸ்க் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..! ஸ்கூட்டர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் இதன் தரிசனம் கிடைக்குமா?

ஹோண்டா ஃபோர்ஷா 750 ஐரோப்பிய நாடுகளில் €10000 என்ற மதிப்பில் விற்கப்படுகின்றது. இது, இந்திய மதிப்பில் ரூ. 8.69 லட்சம் ஆகும். இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இதன் சூப்பர் திறனே இந்த கேள்விக் குறி எழும்ப காரணமாக அமைந்துள்ளது. எனவே, இந்தியச் சாலைக்கு ஏற்றவாறு இதன் திறன் மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles

English summary
Honda Forza 750 More Powerful Than The RE Interceptor 650 Five Things To Know. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X