ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டருக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

ஹோண்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் கிரேஸியா 125 மாடலும் ஒன்று. இந்த ஸ்கூட்டரின் பக்கம் மக்களைக் கவரும் வேண்டும் என்பதற்காக சிறப்பு சலுகை ஒன்றை ஹோண்டா அறிவித்துள்ளது. ஆமாங்க இதற்கு கேஷ்பேக் சலுகையையே ஹோண்டா அறிவித்துள்ளது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரின் விலை ரூ. 73,912 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில் புதிய ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கே ரூ. 5 ஆயிரத்தை கேஷ்பேக்காக திரும்பித் தர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த அரிய சலுகையை ஆண்டின் இறுதி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஹோண்டா அறிவித்துள்ளது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

இது ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விலையில் இருந்து 5 சதவீதம் ஆகும். இந்த சிறப்பு சலுகையைப் பெறுவதற்கு ஓர் நிபந்தனை உள்ளது. அதாவது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் மூலம் இஎம்ஐ திட்டத்தின்கீழ் புதிய கிரேஸியா ஸ்கூட்டரை வாங்குவோருக்கு மடங்கும் இச்சலுகைப் பொருந்தும்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

அதேசமயம், ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யெஸ் பேங்க், ஸ்டாண்டர்டு சேட்டர்டு மற்றும் ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களால் மட்டுமே இச்சலுகையை அனுபவிக்க முடியும். இது ஒரு சிலர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், பெரும்பாலானோர் ஹோண்டாவின் இச்சலுகையைக் கண்டு ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை பிஎஸ்-6 தரத்தில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. மிக சமீபத்தில்தான் இத்தரத்திலான ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

இதில் ஸ்டாண்டர்டு வேரியண்டின் விலை ரூ. 73,912 ஆகும். டீலக்ஸ் வேரியண்டின் விலை ரூ. 80,978 ஆகும். இவையிரண்டுமே சிறப்பம்சங்களில் மட்டுமே வித்தியாசம் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே இரு வேரியண்டிற்கும் இடையில் ரூ. 7 ஆயிரம் வித்தியாசம் தென்படுகின்றது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

ஹோண்டா கிரேஸியாவில் 125சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.14 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றக்கூடியது. இந்த ஸ்கூட்டர் சைபர் மஞ்சள், பியர் ஸ்பார்டன் ரெட், பியர் சைரன் நீலம் மற்றும் மேட் ஆக்ஸிஸ் கிரே ஆகிய நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Honda Grazia 125 Available With Cashback Offer. Read In Tamil.
Story first published: Saturday, December 26, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X