ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

ஹோண்டா மோட்டார்சைக்கிளின் சமீபத்திய அறிமுகமான எச்'னெஸ் சிபி350 பைக்கின் ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

ரெட்ரோ-கிளாசிக் ரோட்ஸ்டர் தோற்றத்தில் ஹோண்டா சிபி350 பைக் திருத்தியமைக்கப்பட்ட என்ஜின் மற்றும் போதுமான செயல்திறன் உடன் சவுகரியமான டூரர் பைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஹோண்டா பைக்கின் ஆக்ஸஸரீகள் தான் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கக்கூடிய விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகள் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக எச்'னெஸ் சிபி350 பைக்கை மாற்றும்.

இதுகுறித்து வெளியாகியுள்ள இந்த வீடியோவில் முதல் ஆக்ஸஸரீ பாகமாக சைடு ஸ்டாண்ட் உள்ளது. பைக்கில் ஏற்கனவே சைடு ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆக்ஸஸரீ எதற்கு ரூ.375 விலையில் கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

ஆனால் பைக்கிற்கு முக்கியமான விபத்து பாதுகாப்பான் தகடு பட்டாம்பூச்சி வடிவில் ஆக்ஸஸரீ வரிசையில் உள்ளது. இதன் விலை ரூ.1,234 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பான் கருப்பு நிறத்தில் கிடைக்கும். அதேபோல் ரப்பர் ஃபோர்க்குகளை ரூ.581 விலையில் பெறலாம்.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

பைக்கின் முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளில் தூசி படிவதை இந்த கூடுதல் ஆக்ஸஸரீ தடுக்கும். பின் இருக்கை பயணிக்கான சேடல் ஸ்டே பார்கள் பைக்கின் ஒரு புறத்திற்கு ரூ.643 ஆகவும், மறுபுறத்திற்கு ரூ.697 ஆகவும் ஆக்ஸஸரீ லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆச்சிரியமளிக்கும் விதமாக சேடல் ஸ்டே பார்கள் ஹோண்டா பிராண்டில் வழங்கப்படவில்லை.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

ரப்பர் மேற்பரப்புடன் பெட்ரோல் டேங்க் பாதுகாப்பான் ரூ.309 விலையிலும், என்ஜின் அடிப்பகுதி பாதுகாப்பான் ரூ.495 விலையிலும் ஆக்ஸஸரீகளாக கொண்டுவரப்பட்டுள்ளன. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளிலேயே மிகவும் விலை கொண்டதாக இரு-துண்டு இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

No Official Accessories Price
1 Pad, Tank Center 309
2 Side Stand 375
3 Engine Lower Protection 465
4 Fork Gators 581
5 Pannier Support A 643
6 Pannier Support B 697
7 Engine Guard 1,234
8 Split Seat Back 3,705
9 Split Seat Brown 3,705
ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரு நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஆக்ஸஸரீயின் விலை ரூ.3,705 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிளவுப்பட்ட இருக்கை அமைப்பானது பைக்கின் உரிமையாளரை தலையணை இருக்கையை நீக்க அனுமதிக்கும்.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

ஹோண்டா சிபி350 பைக்கில் 348.3சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 20.8 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

ஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு! இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்

மொத்தம் 181 கிலோ எடை கொண்ட இந்த ஹோண்டா 350சிசி பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை டீலக்ஸ் வேரியண்ட்டின் விலையாகும். டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட்டின் விலை சற்று கூடுதலாக ரூ.1.90 லட்சம் அளவில் உள்ளது. ராயல் என்பீல்டு மட்டுமின்றி ஜாவா பைக்குகளும் சிபி350-க்கு போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
Honda CB350 Official Accessories Prices – Split Seats, Panniers, Crash Guard
Story first published: Monday, October 26, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X