ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. புக்கிங் செய்த பலருக்கும் தீபாவளிக்கு முன்னதாகவே இந்த மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேர் போட்டியாக ஹோண்டா நிறுவனம் ஹைனெஸ் சிபி350 என்ற மோட்டார்சைக்கிளை அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்று தேர்வை விரும்புபவர்களை குறிவைத்து வந்த இந்த மோட்டார்சைக்கிள் தொழில்நுட்ப அளவில் மேம்பட்டதாக இருக்கிறது.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

இந்த நிலையில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் நேற்று முன்தினம் குர்கானில் உள்ள ஹோண்டா ஆலையில் இருந்து டீலர்களுக்கு அனுப்பும் பணிகள் துவங்கின. இதைத்தொடர்ந்து, டீலர்களுக்கு வந்த ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

முதல் ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளின் சாவியை வாடிக்கையாளருக்கு கொடுத்து டெலிவிரிப் பணிகளை ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் குலேரியா முறைப்படி துவங்கி வைத்தார்.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

ரெட்ரோ க்ளாசிக் எனப்படும் பாரம்பரிய பைக் மாடல்களின் வடிவமைப்பு அம்சங்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இக்காலத்திற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், ஹசார்டு சுவிட்ச், ஹோண்டாவின் ஸ்மார்ட்ஃபோன் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

புதிய ஹோண்டா சிபி350 மோட்டார்சைக்கிளில் 350 சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் சிஸ்டமும் உள்ளது.

 ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், டிஎல்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.1.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டிஎல்எக்ஸ் புரோ வேரியண்ட்டிற்கு ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Japanese motorcycle manufacturer, Honda has commenced H'Ness CB350 deliveries in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X