ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான எச்'னெஸ் சிபி350 க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்ஷோரூம் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புத்தம் புதிய எச்'னெஸ் சிபி350 பைக்கை கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பிராண்டின் திடீர் அறிமுகம் போல் வெளிவந்த இந்த க்ரூஸர் பைக் ராயல் என்பீல்டு, ஜாவா மற்றும் சில பெனெல்லி பைக்குகளுக்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

இந்த நிலையில் புதிய எச்'னெஸ் சிபி350 க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை ரூ.1.85 லட்சம் என ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹோண்டா பிராண்ட்டில் இருந்து வெளிவந்துள்ள இந்த புதிய தயாரிப்பு பழமையான ரெட்ரோ டிசைனில் இரு புறங்களிலும் டர்ன் இண்டிகேட்டர்களை கொண்ட வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

எளிமையான மற்றும் தெளிவான டிசைன்களை அனைத்து கோணங்களிலும் பெற்றுவந்துள்ள இந்த மோட்டார்சைக்கிளில் முன் & பின் ஃபெண்டர்கள், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் என்ஜின் கவர் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பெட்ரோல் டேங்கின் இரு புறங்களிலும் ‘ஹோண்டா' முத்திரை பழைமையான பைக்குகளில் வழங்கப்பட்டதை போல் மிகவும் தடிமனாக பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

ஒற்றை துண்டாக வழங்கப்பட்டுள்ள இருக்கை நிச்சயம் பைக் ஓட்டிக்கும் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் மிகவும் சவுகரியமானதாகவே இருக்கும். வட்ட வடிவிலான விங்கர்ஸ் உடன் பின்புறத்தில் டெயில்லைட்டும் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எச்'னெஸ் பைக்கில் 348.36சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

பிராண்டின் எச்எஸ்டிசி (ஹோண்டா செலக்டபள் டார்க் கண்ட்ரோல்) சிஸ்டத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சஸ்பென்ஷிற்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் செட்-அப்பும், பின்பக்கத்தில் ட்யூல் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க 310மிமீ மற்றும் 240மிமீ-ல் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளன. இவற்றுடன் ஏபிஎஸ்-உம் நிலையாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. சிறிய திரையுடன் கொண்டுவரப்பட்டுள்ள இதன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ப்ளூடூத் இணைப்புடன் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், குறுந்தகவல்கள் மற்றும் அலைபேசி அழைப்பு எச்சரிக்கை மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட் சிவப்பு மெட்டாலிக், பேர்ல் நைட் ஸ்டார் ப்ளாக், மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் என்ற மூன்று சிங்கிள்-டோன் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

அதுவே டாப் டிஎக்ஸ்எல் ப்ரோ வேரியண்ட்டிற்கு வெள்ளை- அத்லெட்டிக் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் நைட் ஸ்டார் ப்ளாக்- ஸ்பியர் சில்வர் மெட்டாலிக், மேட் ஸ்டீல் ப்ளாக் மெட்டாலிக்- மேட் க்ரே மெட்டாலிக் என்ற ட்யூல்-டோன் நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், பண்டிகை காலம் நெருங்கிவரும் இந்த வேளையில் எச்'னெஸ் சிபி350 பைக்கின் ஆரம்ப விலையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஹோண்டா எச்’னெஸ் சிபி350 க்ரூஸர் பைக்கின் ஆரம்ப விலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

மிட்-சைஸ் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவரும் என்ற நம்பிக்கையோடு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய எச்'னெஸ் சிபி350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.85 லட்சமாகும் என தெரிவித்தார். இது ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 பைக்கை காட்டிலும் சற்று அதிகம் என்பதால் இனி வருங்காலங்களில் இந்த ஹோண்டா க்ரூஸர் பைக்கின் விற்பனை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
Honda H’Ness CB 350 Cruiser Launched In India: Prices Start At Rs 1.85 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X