ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசனை பற்றிய விபரங்கள் வீடியோ ஒன்றின் மூலமாக வெளிவந்துள்ளன. இந்த வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து ஹார்னெட் 2.0 பைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் புதிய லிமிடேட் எடிசன் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

ரெப்சோல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் பெயருக்கு ஏற்றாற்போல் மோட்டோஜிபி போட்டிகளால் கவரப்பட்டு பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த எடிசன் வழக்கமான ஹார்னெட் 2.0 பைக்கில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை வெளிக்காட்டும் வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது.

ஹோண்டாவின் மோட்டோஜிபி ரேசிங் மோட்டார்சைக்கிளான ஆர்சி213வி-இல் இருந்து ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் பெயிண்ட்டை பெற்றுள்ளது. பெயிண்ட்டில் முதன்மையான நிறமாக ஆரஞ்ச் உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் துணை நிறங்களாக உள்ளன.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

மற்றவை அனைத்தும் ஸ்டாண்டர்ட் ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ளதை போன்று கருப்பு நிறத்தால் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் காட்சியளிக்கின்றன.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

‘ரெப்சோல்' ஸ்டிக்கர் பெட்ரோல் டேங்க், மைய பேனல் மற்றும் முன்பக்க மட்கார்டில் வழங்கப்பட்டுள்ளது. ‘ஹோண்டா' எழுத்து ஸ்டிக்கர் சம்ப் பாதுகாப்பான் மற்றும் பிராண்டின் முத்திரை டேங்கில் வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

அலாய் சக்கரங்களும் இந்த எடிசனில் ஆரஞ்ச் நிறத்தை பெற்றுள்ளன. இதுதான் ஒட்டுமொத்த பைக்கிற்கும் ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது. மற்றப்படி ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளில் வழக்கமாக வழங்கப்படும் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

இதனால் 184.4சிசி என்ஜின் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் தொடர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 17 எச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு சதுர கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சோல் எடிசன் எந்த விதத்தில் ஸ்பெஷலானது? விளக்கும் வீடியோ இதோ...

என்ஜின் உடன் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளன. ஹார்னெட் 2.0 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,26,880 ஆக உள்ளது. ரெப்சோல் எடிசனின் விலை இந்த விலையை காட்டிலும் வெறும் ரூ.2,000 மட்டுமே அதிகமாகும்.

Most Read Articles
English summary
Honda Hornet 2.0 Repsol Edition Detailed In A Walkaround Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X