ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இன்று (நவம்பர் 19) அதன் ஹார்னெட் 2.0 மற்றும் டியோ ஸ்கூட்டர் மாடல்களின் 'ரெப்சோல் ஹோண்டா' லிமிடேட் எடிசன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

இதில் ஹார்னெட் 2.0 ரெப்சோல் ஹோண்டா எடிசனின் விலை ரூ.1,28,351 ஆகவும், டியோ ரெப்சோல் ஹோண்டா எடிசனின் விலை ரூ.69,757 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹோண்டாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

இந்த லிமிடேட் எடிசன்களில் ரெப்சோல் ஹோண்டா ரேசிங் குழுவினர் வடிவமைத்த கிராஃபிக்ஸ் மற்றும் டிசைன், ஆரஞ்ச் நிற சக்கர ரிம்களுடன் வழங்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் வரலாற்றில் ரேசிங் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் சிஇஒ-வுமான அட்சுஷி ஒகாடா கூறியுள்ளார்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

மேலும் கூறிய அவர், அவர்களின் ஒத்துழைப்பிலிருந்து, ஹோண்டா மற்றும் ரெப்சோல், ரேஸ் டிராக்கில் வெற்றிகரமான தொடரைத் தொடர்கின்றன. ஹோண்டாவின் ரேசிங் ஆர்வத்திற்கு சமீபத்திய 800வது மோட்டோஜிபி வெற்றி ஒரு சான்றாகும். இதனை கொண்டாடும் நோக்கிலேயே தற்போது ஹார்னெட் 2.0 மற்றும் டியோ மாடல்களின் ரெப்சோல் எடிசன்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கருத்து தெரிவிக்கையில், "வரையறுக்கப்பட்ட பதிப்புகளான ரெப்சோல் ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் டியோவை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவில் உள்ள மோட்டோஜிபி ரசிகர்களுக்காக இந்திய சாலைகளில் ஹோண்டாவின் பந்தய சுகத்தை மாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என கூறினார்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

ஹோண்டாவின் சமீபத்திய இந்திய அறிமுகங்களுள் ஒன்றான ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளில் 184சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் இரட்டை பெடல் டிஸ்க்குகள் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 17.03 பிஎச்பி மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறும் ஹார்னெட்டிற்கு மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக், மேட் மார்வல் நீலம் மெட்டாலிக், மேட் சங்க்ரியா சிவப்பு மெட்டாலிக், பேர்ல் இக்னியஸ் ப்ளாக் என்ற நான்கு நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ரெப்சோல் அல்லாமல் இந்த நிறங்களில் ஹார்னெட் 2.0 பைக்கின் விலை ரூ.1.28 லட்சமாகும்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 & டியோ ஸ்கூட்டரை இனி ரெப்சோல் பதிப்பிலும் பெறலாம்! குறுகிய காலத்திற்கு மட்டுமே..

டியோவை பொறுத்தவரையில் அறிமுகத்தில் இருந்து இளம் தலைமுறையினரின் ஃபேரட் ஸ்கூட்டர் மாடலாக விளங்கி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச், ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை செயல்பாட்டு ஸ்விட்ச் மற்றும் வெளிப்பக்க ஃப்யுல் லிட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Honda unveils all new Repsol Honda editions of Hornet 2.0 & Dio
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X