Just In
- 2 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிரடியாக பிரபல இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்திய ஹோண்டா... எந்தெந்த மாடல்கள் என்று தெரியுமா?
ஹோண்டா நிறுவனம் அதன் பிரபலமான இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹோண்டா நிறுவனம், அதன் மூன்று பிரபலமான இருசக்கர வாகனங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகளவு இருசக்கர வாகனங்களை விற்பனையைச் செய்து வரும் நிறுவனங்களில் ஹோண்டா நிறுவனமும் ஒன்று.

இந்நிறுவனத்தின் ஆக்டிவா மாடல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், ஹீரோ நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் பைக்கான ஸ்பிளெண்டர் மாடலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அது விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்டிவா ஸ்கூட்டரின் விலையைதான் ஹோண்டா நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. இத்துடன், தனது நிறுவனத்தின் மற்றுமொரு பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையைாகும் ஸ்கூட்டரான டியோ மற்றும் யூனிகார்ன் பைக் ஆகியவற்றின் விலையையும் ஹோண்டா உயர்த்தியிருக்கின்றது.

மேற்கூறிய மாடல் அனைத்தும் பிஎஸ்6 தர இருசக்கர வாகனங்களாகும். ஹோண்டா நிறுவனம், யூனிகார்ன் பைக்கை ஒரு தேர்விலும், ஆக்டிவா ஸ்கூட்டரை மூன்று தேர்விலும், டியோவிற்கு இரு தேர்வுகளையும் வழங்கி வருகின்றது. இவையணைத்திற்கும் ஒரே மாதிரியான விலையுயர்வைதான் அது தற்போது வழங்கியிருக்கின்றது.

அதாவது, அனைத்து மாடல்களின் விலையிலும் ரூ. 955 உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால், முன்னதாக ரூ. 93,593க்கு கிடைத்து வந்த யூனிகார்ன் பைக், தற்போது ரூ. 94,548 ஆக மாறியிருக்கின்றது. இதேபோன்று, ரூ. 68,042 என்ற விலையில் இருந்து ரூ. 75,042 வரையிலான விலையில் விற்கப்பட்டு வந்த ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விலையிலும் 955 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலையுயர்வால் ஆக்டிவா ஸ்கூட்டரின் ஆரம்ப விலையே ரூ. 68,997 ஆக மாறியுள்ளது. இதில், உச்சபட்ச விலையைக் கொண்ட வேரியண்டாக ஆக்டிவாவின் டிஸ்க் பிரேக் தேர்வு உள்ளது. இதன் விலை ரூ.75,997 ஆக உயர்ந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஹோண்டா டியோ ஸ்கூட்டரும் புதிய விலையுயர்வால் ரூ. 61.497ஐ ஆரம்ப விலையைக் கொண்டதாக மாறியிருக்கின்றது.

டியோவின் டாப் வேரியண்டான டிஎல்எக்ஸ் தேர்வின் விலை ரூ. 64,847ஆக மாறியிருக்கின்றது. இந்த திடீர் விலையுயர்விற்கான உரிய காரணம் வெளியிடப்படவில்லை. இது ஹோண்டா நிறுவனத்தின் வழக்கமான விலையுயர்வுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்த புதிய விலையுயர்வு சத்தமே இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாக வாகனத்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஹோண்டா யுனிகார்ன்
பிஎஸ்6 தரத்திலான ஹோண்டா யுனிகார்ன் பைக் கடந்த பிப்ரவரி மாதம்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, அதன் விலை ரூ. 93,593 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலையையே தற்போது ஹோண்டா திருத்தியிருக்கின்றது. அதேசமயம், பழைய விலையானது பிஎஸ்4 வாகனத்தைக் காட்டிலும் 13 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும். எனவே, புதிய உமிழ்வு விதியுடன் விற்பனைக்கு வந்த ஹோண்டா உச்சபட்ச விலையுயர்வுடன்தான் விற்பனைக்கே வந்தது.

இந்த நிலையிலேயே இரண்டாம் முறையாக அதன் விலை தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கில் 162.7 சிசி திறன் கொண்ட எஃப்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஹோண்டாவின் ஈகோ தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிகபட்சமாக 12.73 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6
ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 மாடல் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை டிரம், டிரம் அலாய் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகியவை ஆகும். மற்றபடி எஞ்ஜின் விஷயத்தில் இந்த மூன்று மாடல்களும் ஒரே திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதில், சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஃப்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.29 எச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் ஸ்டார்ட்/ஸ்டாப், சைட் ஸ்டாண்ட் அலாரம், எஞ்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் ஈகோ தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹோண்டா டியோ பிஎஸ்6
ஹோண்டா நிறுவனம் அதன் டியோ பிஎஸ்6 மாடலையும் கடந்த பிப்ரவரி மாதம்தான் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் ஆகிய இருவிதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அதன் பிஎஸ்4 மாடலைக் காட்டிலும் ரூ. 7,100 விலையுயர்வில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் தற்போது அதன் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விலையை பட்டியலாக கீழே காணலாம்:
புதிய விலை | பழைய விலை | புதிய விலையுயர்வு | ||
டியோ | எஸ்டிடி | ₹61,497 | ₹60,542 | ₹955 |
டிஎல்எக்ஸ் | ₹64,847 | ₹63,892 | ₹955 | |
ஆக்டிவா 125 | டிரம் | ₹68,997 | ₹68,042 | ₹955 |
டிரம் அலாய் | ₹72,497 | ₹71,542 | ₹955 | |
டிஸ்க் | ₹75,997 | ₹75,042 | ₹955 | |
யூனிகார்ன் | ₹94,548 | ₹93,593 | ₹955 |