Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது 3வது முறை... ஹோண்டாவின் அறிவிப்பால் உறைந்து நிற்கும் இந்திய இளைஞர்கள்... இப்படி பண்ணா எப்புடிங்க
ஹோண்டா நிறுவனத்தின் அதிரடி செயலால் இந்திய இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் டியோ ஸ்கூட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விலையை ஹோண்டா நிறுவனம் தற்போது உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 473 வரை விலையுயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் விலையை உயர்த்துவது இது மூன்றாவது முறையாகும். அதாவது, இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து இப்போது மூன்றாவது முறையாக ஹோண்டா டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம், டியோ ஸ்கூட்டரை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அவை, எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் ஆகியவை ஆகும். புதிய விலை உயர்வால் எஸ்டிடி வேரியண்டின் விலை ரூ. 61,970 ஆகவும், டிஎல்எக்ஸ் வேரியண்டின் விலை ரூ. 65,320 ஆகவும் உயர்ந்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிமுகத்தின்போது அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் இப்போதைய விலை பல மடங்கு உயர்வானதாக காட்சியளிக்கின்றது. எஸ்டிடி வேரியண்ட் இதுவரை ரூ. 5,749-யும், டிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ. 7,099 விலை உயர்வையும் பெற்றிருக்கின்றது. தொடர்ச்சியான அப்டேட்டுகளின் காரணமாக இந்த விலையுயர்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் 110சிசி எஃப்ஐ திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இது பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 7.6 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ஏசிஜி ஸ்டார்டர் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மிக அமைதியான எஞ்ஜின் ஸ்டார்ட் ஒலியை மட்டுமே எழுப்ப உதவுகின்றது. இத்துடன், சில விநாடிகளில் ஸ்டார்ட் செய்யவும் உதவும்.