ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான எளிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சொல்ல முடியாத துயரங்களை கொடுத்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைய அடியோடு புரட்டி போட்டிருப்பதுடன், அனைத்து தொழில்களையும் முடக்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மன உறுதியுடன் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ள வாகனத் துறையும் பல்வேறு திட்டங்களும் இந்த கடினமான சூழலிலிருந்து வெளியே வர முயற்சித்து வருகின்றன.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

இதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறப்பு திட்டங்களை வாகன நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா டூ வீலர் நிறுவனம் தனது வாகனங்களுக்கான எளிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

இந்த திட்டத்தின்படி, வாகனத்தின் விலையில் 95 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன், முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணையில் 50 சதவீதம் குறைவான தொகையை செலுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

அடுத்த மூன்று மாதங்களில் நிலைமை ஓரளவு சீரடைந்தவுடன் வாடிக்கையாளர்கள் முழுமையாக மாதத் தவணையை செலுத்தும் விதத்தில் இந்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

இந்த திட்டத்தின் கீழ், ரூ.40,000 கடன் வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.828 மாதத் தவணையும், அதன்பிறகு ரூ.1656 மாதத் தவணையையும் செலுத்தலாம். ரூ.50,000 கடன் வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.1,035 மாதத் தவணையும், அதன் பின்னர் மாதம் ரூ.2,070 வரை செலுத்தலாம். ரூ.70,000 கடன் வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.1,449 மாதத் தவணையும், அதன் பின்னர் ரூ.2,898 என்ற மாதத் தவணையுடன் தொடரலாம்.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

இந்த சிறப்பு கடன் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, குறிப்பிட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்பட உள்ளதாக ஹோண்டா டூ வீலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

புதிய ஹோண்டா இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருப்போர், தற்போதைய பொருளாதார சூழலை சமாளித்துக் கொண்டு உடனடியாக தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கும்.

ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்

லாக் டவுன் நீடித்தாலும் கொரோனா தொற்று குறைவான பகுதிகளில் ஹோண்டா ஷோரூம்கள் டீலர்கள் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும்பான்மையான ஹோண்டா ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, ஹோண்டா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களை தொடர்பு கொண்டு புதிய வாகனத்தை வாங்கலாம்.

Most Read Articles

English summary
Honda has introduced new finance schemes for scooters and bikes in India.
Story first published: Saturday, July 4, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X