ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய சிபி125 பைக்கை வாங்குபவர்களுக்காக ரூ.5 ஆயிரம் வரையிலான பணம் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

ஹோண்டா சிபி125 மோட்டார்சைக்கிள் ட்ரம் மற்றும் டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முறையே ரூ.75,010 மற்றும் ரூ.79,210 ஆக உள்ளன. இந்த விலைகளை ரூ.5000 குறைத்து வாங்கும் விதமாக தற்போது பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

இந்த சலுகை ஹோண்டாவின் கூட்டணி வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டாண்டர்ட் சேட்டர்ட் மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்டவற்றின் மூலமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லப்படியாகும்.

ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

ஹோண்டா சிபி125 பைக்கில் புதிய 125சிசி, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 10.72 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 10.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

என்ஜின் அமைப்பில் முதல் மோட்டார்சைக்கிளாக சிபி125 ஏசிஜி ஸ்டார்டர் தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இது அமைதியான என்ஜின் ஸ்டார்ட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ஏபிஎஸ்-ஐயும் இந்த ஹோண்டா பைக் பெறுகிறது.

ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

ஹோண்டா ஷைனின் ப்ரீமியம் வெர்சனாக சிபி125 பைக் கடந்த வருடத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஷைன் மோட்டார்சைக்கிள் மாடலை பொறுத்தவரையில் ஹோண்டா சமீபத்தில் இதன் விற்பனையில் 90 லட்சம் என்ற இமாலய உயரத்தை எட்டியிருந்தது.

ஹோண்டா சிபி125 பைக் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! ரூ.5 ஆயிரம் வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்

சுமார் 14 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஷைன் இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் 125சிசி மோட்டார்சைக்கிள்களுள் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 94,413 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Honda India offers upto Rs.5,000 cashback on SP125 motorcycle.
Story first published: Friday, December 25, 2020, 22:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X