என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தற்போது ஜிக்வீல்ஸ் செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலினை இந்த செய்தியில் பார்ப்போம்.

என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

அந்த செய்திக்குறிப்பில் இந்த புதிய ஹோண்டா பைக், சிபி ஹார்னெட் 200ஆர் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒருவேளை இந்த பைக் மாடலாக இருப்பினும் இது இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாகவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

இந்த புதிய ஹார்னெட் பைக்கின் வருகைக்கு மிக முக்கிய காரணம், முன்னதாக விற்பனையில் இருந்த ஹார்னெட் 160அர்-ன் விற்பனை பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படாததால் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மாற்றாகவே ஹார்னெட் 200ஆர் கொண்டுவரப்படுகிறது.

என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

இந்த மாற்றத்திற்கு, தயாரிப்பு பிஎஸ்4-வில் இருந்து பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டால் ஏற்படும் கட்டாய விலை அதிகரிப்பை சமாளிப்பதற்காகவும் இருக்கலாம். ஏனெனில் சமீபத்திய ஹோண்டாவின் அறிமுகமான பிஎஸ்6 எக்ஸ்-பிளேடின் விஷயத்தில் என்ன ஆனது என்று நமக்கு தெரியும்.

என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் சுமார் ரூ.17 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 எக்ஸ்-பிளேட் விற்பனைக்கு வந்துள்ளது. இதனையும் கருத்தில் கொண்டே ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கு பதிலாக ஹார்னெட் 200ஆர்-ஐ ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டுவருகிறது என நினைக்கிறோம்.

என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

ஏனெனில் பிஎஸ்6 அப்டேட்டினால் பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டாலும் 200சிசி என்பதால் பெரிய அளவில் தயாரிப்பு நிறுவனத்திற்கு பாதகமாக இருக்காது. மேலும் தற்சமயம் 200சிசி பைக் பிரிவு இந்திய சந்தையில் வளர்ந்துவரும் பிரிவாக உள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 200ஆர் பைக் ஒருவேளை இந்தியாவில் அறிமுகமானால் அதற்கு போட்டியினை அளிக்க பஜாஜ் பல்சர் என்எஸ்200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி உள்ளிட்ட 200சிசி பைக்குகள் தயாராகவுள்ளன. முன்னதாக ஹோண்டா நிறுவனம் சிபிஎஃப் 190ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது.

என்எஸ்200-க்கு போட்டியாக புதிய 200சிசி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..?

ஆனால் அது நடைபெறாமல் போகவே, தற்போது அதன் அடிப்படையில் உருவான ஹார்னெட் 200ஆர் இந்திய சந்தைக்கு வருகிறது. இந்த 200சிசி பைக்கை தனது இந்திய தொழிற்சாலையிலேயே தயாரிக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் இதன் விலையினை பட்ஜெட் ரகத்திலேயே எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Honda CB Hornet 200R Coming To India?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X