ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

2020ஆம் வருட இறுதி நாட்களை முன்னிட்டு சந்தையில் அறிமுகமான புதிய மோட்டார்சைக்கிள் மாடலான ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கொண்டுவந்துள்ள பைக் தான் ஹைனெஸ் சிபி350 ஆகும்.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.85 லட்சத்தில் இருந்து ரூ.1.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.90 லட்சத்தில் சில கூடுதல் வசதிகளுடன் ஹைனெஸின் ப்ரீமியம் டிஎல்எக்ஸ் ப்ரோ ட்ரிம் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

ஹோண்டாவின் இந்த புதிய தயாரிப்பை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் போட்டி மாடலை வாங்க இதுவே சரியான நேரம். ஏனெனில் 2020ஆம் ஆண்டின் இறுதி நாட்களை முன்னிட்டு ரூ.5000 வரையிலான பணம் தள்ளுபடி சலுகைகள் ஹோண்டா சிபி350 பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

இந்த தள்ளுபடி அறிவிப்பு ஹோண்டாவின் கூட்டணி நிறுவனங்களான யெஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் க்ரெட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் உபயோகித்து மாதத்தவணையில் இந்த பைக்கை வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லப்படியாகும்.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

மேலும் இந்த அறிவிப்பிற்கான கால வரம்பு இந்த டிசம்பர் 31ஆம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை பொருத்தவரையில், இதில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 348சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

அதிகப்பட்சமாக 21 எச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியட்ர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. முன்பக்கத்தில் ஹைனெஸ் சிபி350 பைக் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களை பெறுகிறது.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

பைக்கில் வழங்கப்படும் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு இணையான ஹோண்டாவின் எச்எஸ்டிசி உள்ளிட்டவை உள்ளன.

ஹோண்டாவின் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்கான நேரம் வந்தாச்சி

ஹோண்டா மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும் 2020 இறுதி நாட்களை முன்னிட்டு தங்களது தயாரிப்புகளுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏனெனில் புதிய வாகனங்களுடன் புதிய வருடத்தை துவங்கவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் விரும்புவர். நீங்கள் எப்படி?!!

Most Read Articles

English summary
Honda introduces year end discount H'ness CB350.
Story first published: Tuesday, December 22, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X