ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

கருடா எக்ஸ் சாமுராய் என்ற பெயரில் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிசனை இந்தோனிஷிய நாட்டு சந்தையில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசனின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர், தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமான குவாட்டர்-லிட்டர் ஸ்போர்ட்ஸ் பைக்காக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் இந்த 250சிசி பைக்கில் கடைசியாக இந்த ஆண்டு துவக்கத்தில் சிறிய அளவிலான என்ஜின் மாற்றங்களுடன் கூடுதலாக ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச்சை கொண்டுவந்திருந்தது.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

அதனை தொடர்ந்து தற்போது சிபிஆர்250ஆர்ஆர்-ன் ஸ்பெஷல் எடிசன் கருடா எக்ஸ் சாமுராய் என்ற பெயரில் இந்தோனிஷியா நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அட்டகாசமான கிராஃபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்களின் இடதுபுறத்தில் கருடா என்ற பெயருக்காக தங்க நிறத்தில் கழுகின் படம் பொறிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

அதுவே பைக்கின் இடது பக்கம் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய கிராஃபிக்ஸை தாண்டி பார்த்தால் பைக்கிற்கு கருப்பு நிறத்தில் பெயிண்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் முன்பு கூறப்பட்ட அதே தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

மற்றப்படி பெரிய அளவிலான ஹெட்லைட் & விண்ட்ஸ்க்ரீன், பின்பக்கத்தில் அம்பு வடிவிலான எல்இடி ப்ரேக் விளக்குகள், தடிமனான தோற்றத்தில் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை உள்பட இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இந்த ஸ்பெஷல் எடிசனில் கொண்டுவரப்படவில்லை.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

இதனால் வழக்கமான 249.7சிசி, நீர்-கூல்டு, இன்லைன்-இரட்டை என்ஜின் தான்

இந்த கருடா ஸ்பெஷல் எடிசன் பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-ல் 41 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு சதுர வடிவிலான கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் பயன்படுத்துவதற்கு ஸ்லிப்/அசிஸ்ட் க்ளட்ச்-உம் சிபிஆர்250ஆர்ஆர்-ல் வழங்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...

இதற்கிடையில் கவாஸாகி இசட்எக்ஸ்-25ஆர் பைக்கிற்கு போட்டியாக புதிய நான்கு-சிலிண்டர் குவார்ட்டர் லிட்டர் மோட்டார்சைக்கிளின் விற்பனையிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Honda CBR250RR Garuda X Samurai Edition Launched
Story first published: Thursday, August 20, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X