இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

ரெட்ரோ தோற்றத்தில் ஹோண்டா சிபி1300 மோட்டார்சைக்கிள் ஜப்பானில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

ஹோண்டாவின் தயாகமான ஜப்பான் நாட்டு சந்தையில் புதிய சிபி1300 பைக், சூப்பர் ஃபோர், சூப்பர் போல்ட்'ஆர், சூப்பர் ஃபோர் எஸ்பி மற்றும் சூப்பர் போல்ட்'ஆர் எஸ்பி என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

இதில் சூப்பர் ஃபோர் வேரியண்ட்கள், வட்ட வடிலான ஹெட்லைட் உடன் அதிகளவில் பேனல்கள் இல்லாத நாக்டு ரோட்ஸ்டர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுவே சூப்பர் போல்ட்'ஆர் ரேஞ்ச் ஆனது மாடர்ன் தோற்றத்தில் ஹெட்லைட் உடன் சில கூடுதல் ஸ்டைலிங் பேனல்களை கொண்டுள்ளன.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

இந்த நான்கு வேரியண்ட்களும் ஒவ்வொரு விதமான நிறங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி சூப்பர் ஃபோரை சூரிய ஒளியின் வெள்ளை நிறத்திலும், அதன் எஸ்பி வெர்சனை பேர்ல் ஹாவ்க்ஸ் ஐ ப்ளூ நிறத்திலும் அங்குள்ள வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

சூப்பர் போல்ட்'ஆர் மற்றும் சூப்பர் போல்ட்'ஆர் எஸ்பி வேரியண்ட்கள் முறையே பீட்டா சில்வர் மெட்டாலிக் மற்றும் கேண்டி-க்ரோமோஸ்பியர் சிவப்பு நிறத்தில் ஜப்பானில் கிடைக்கும். இவை தவிர்த்து மற்ற பாகங்கள் அனைத்தும் இந்த நான்கு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளன.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!
Honda CB1300 Series
CB1300 Price Colour
Super Four JPY 15,62,000 (₹11.16 Lakh) Pearl Sunbeam White, Beta Silver Metallic
Super Bold'or JPY 16,72,000 (₹11.95 Lakh)
Super Four SP JPY 19,36,000 (₹13.8 Lakh) Candy Chromosphere Red, Pearl Hawks Eye Blue
Super Bold'or SP JPY 20,46,000 (₹14.62 Lakh)

சூப்பர் ஃபோர் மற்றும் அதன் எஸ்பி வெர்சனின் விலைகள் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.11.16 லட்சம் மற்றும் ரூ.13.83 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சூப்பர் போல்ட்'ஆரின் விலை ரூ.11.95 லட்சத்திலும், அதன் எஸ்பி வெர்சனின் விலை அதிகப்பட்சமாக ரூ.14.62 லட்சத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

சிபி1300 வேரியண்ட்களில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் இரட்டை ரோட்டார்களும், பின் சக்கரத்தில் சிங்கிள்-டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

இதன் அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே 1,284சிசி, 4-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7750 ஆர்பிஎம்-ல் 111.3 பிஎச்பி மற்றும் 6250 ஆர்பிஎம்-ல் 112 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக்!!

கியர்பாக்ஸ் ஆனது ஸ்லிப்பர் மற்றும் உதவி க்ளட்ச் செயல்பாட்டுடன் மெருக்கூட்டப்பட்டிருந்தாலும், விரைவுமாற்றி (quickshifter) கூடுதல் தேர்வாகவே வழங்கப்பட்டுள்ளது. 3 ரைடிங் மோட்கள் (ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட் மற்றும் மழை), ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை இந்த ஹோண்டா சிபி பைக்கில் வழங்கப்பட்டுள்ள மற்ற எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளாகும்.

Most Read Articles

English summary
New Honda CB1300 series launched in Japan, price starts at INR 11.16 lakh
Story first published: Thursday, December 24, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X