Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா ஸ்டைல், ஓஹோ விலை... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது ஹோண்டா லிவோ பிஎஸ்6... முழு விபரம்!
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் அட்டகாசமான ஸ்டைல் மற்றும் விலையில் ஹோண்டா லிவோ பிஎஸ்6 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் அதன் புகழ்வாய்ந்த மாடல்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா, டியோ மற்றும் கிரேஸியா உள்ளிட்ட ஸ்கூட்டர்களையும், ஹோண்டா யூனிகார்ன், சிபிஆர், ஷைன் உள்ளிட்ட பைக்குகளையும் அது அறிமுகம் செய்தது.

இந்நிலையில், பிஎஸ்6 தரத்திலான லிவோ எனும் புது முக பைக்கை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது. மற்றுமொரு புகழ்வாய்ந்த மாடலான டிவிஎஸ் ஸ்டார் சிட்டிக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு பைக்குகளுக்கும் இடையே கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஸ்கூட்டர் 110சிசி திறனுடைய பைக்கை விரும்பும் பட்ஜெட் தட்டு மக்களை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அதிக மைலேஜை எதிர்பார்க்கும் தினசரி பைக் பயனர்களின் தேவையை உணர்ந்து இந்த பைக்கை தயாரித்திருக்கின்றது ஹோண்டா.

இதற்காக, முந்தைய மாடல் லிவோ-வைக் காட்டிலும் எக்கச்சக்கமான அப்டேட்டுகளை வாரி வழங்கப்பட்டுள்ளது. இதில், மிக முக்கியமானதாக பிஎஸ்6 தரம் கொண்ட 110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. இதில், ஹோண்டாவின் பிஜிஎம்-எஃப்ஐ (ப்யூவல் இன்ஜெக்சன்) சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, முந்தைய மாடலைக் காட்டிலும் இது குறைந்தளவு எரிபொருளை செலவழிக்கும்.

இத்துடன், eSP எனப்படும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் திறனும் அந்த எஞ்ஜினுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக ஹோண்டா லிவோ பைக்கினை எரிபொருள் திறன்மிக்க பைக்காக மாற்றியுள்ளது.

இதன் விளைவாக, குறைந்த எரிபொருள், குறைந்த மாசு என்ற கூடுதல் அம்சத்தை அது பெற்றிருக்கின்றது. இத்துடன், எதிர்பார்க்காத வகையில் அதிக பெர்ஃபார்மன்ஸையும் அது வழங்குவதாக கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, காஸ்மெட்டிக் அப்டேட்டும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், புதிய கிராஃபிக், புதுமையான தேற்றத்தில் ப்யூவல் டேங்க் மற்றும் அதில் கவசம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ப்யூவல் டேங்கையும், பைக்கின் முன்பக்கத் தோற்றத்தையும் பார்க்கும்போது லிவோ மாடல் பைக்தானா என்ற கேள்வியை எழுப்புமளவிற்கு உள்ளது.

இதேபோன்று, பிஎஸ்6 ஹோண்டா லிவோ பைக்கில் தொழில்நுட்ப கருவிகளும் அதிகளவில் புகுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், புத்தம் புதிய டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஏசிஜி ஸ்டார்டர் மோட்டார், பாஸிங் ஸ்விட்சுடன் கூடிய டிசி ஹெட்லேம்ப், ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச் மற்றும் சர்வீஸ் நாள் இன்டிகேட்டர் உள்ளிட்ட பல்வறு வசதிகள் அதில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த பைக்கின் இருக்கை அமைப்பைப் பற்றி பார்ப்போமேயானால், 17 மிமீ அளவுள்ள இருக்கை பொருத்தப்பட்டிருக்கின்றது. இது மற்ற பைக்கைக் காட்டிலும் கூடுதல் சௌகரியமான அனுபவத்தை ரைடர் மற்றும் பின்னால் அமர்பவருக்கும் வழங்கும். இதை கூடுதல் சுகமானதாக மாற்றுவதற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்க வீலிலும், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் பின் பக்க வீலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், கூடுதல் பாதுகாப்பு அம்சமாக டிரம் அல்லது டிஸ்க் பிரேக் தேர்வு இதில் வழங்கப்படுகின்றது. இத்துடன், ஸ்டாண்டர்டு அம்சமாக சிபிஎஸ் பிரேக்கிங் அம்சமும் ஹோண்டா லிவோ பிஎஸ்6 பைக்கில் இடம்பெறுகின்றது.
இவ்வாறு, சிறப்பம்சங்களில் நம்மை மயக்கிய லிவோ, நிறத்தேர்விலும் பல ஆப்ஷனை வழங்குகின்றது. அந்தவகையில், நான்கு விதமான தேர்வை அது வழங்குகின்றது.

அவை, அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் கருப்பு ஆகிய நிற தேர்வு இதில் காணப்படுகின்றது.
இந்த பைக் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கிற்கு மட்டுமின்றி பஜாஜ் பிளாட்டினா மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகிய பைக்குகளுக்கும் செம்ம டஃப் கொடுக்க இருக்கின்றது.