Just In
- 10 min ago
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- 49 min ago
கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்!
- 1 hr ago
பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
Don't Miss!
- News
பைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா
- Movies
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- Sports
மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் மாடல் விலை விபரம் வெளியானது!
ஹோண்டா லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் மாடலின் விலை விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவின் பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனம் மிக வலுவான நிலையில் உள்ளது. இந்த ரகத்தில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், பட்ஜெட் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், லிவோ 110 பைக் மாடலும் ஹோண்டாவின் பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் முக்கிய வர்த்தகத்தை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் லிவோ 110 பைக் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டது.

ஹோண்டா லிவோ 110 பைக்கின் பிஎஸ்-6 மாடலானது டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்ட இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், லிவோ பிஎஸ்6 டிரம் பிரேக் மாடலின் விலை அப்போதே அறிவிக்கப்பட்டது. ரூ.70,056 எக்ஸ்ஷோரூம் விலையில் டிரம் பிரேக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஹோண்டா இருசக்கர வாகனப் பிரிவின் இந்திய இணையதளப்பக்கத்தில் லிவோ 110 பிஎஸ்6 மாடலின் டிஸ்க் பிரேக் மாடலின் விலை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா லிவோ 110 பிஎஸ்-6 பைக்கின் டிஸ்க் பிரேக் மாடலுக்கு ரூ.74,256 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டிரம் பிரேக் மாடலைவிட ரூ.4,200 வரை விலை கூடுதலாக வந்துள்ளது.

புதிய ஹோண்டா லிவோ 110 பைக்கின் பிஎஸ்6 மாடலில் 109.51 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் சிறப்பான செயல்திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 9.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா லிவோ 110 பிஎஸ்-6 மாடலின் எஞ்சின் மட்டுமின்றி, புதிய பொலிவுடன் வந்துள்ளது. பெட்ரோல் டேங்க்கில் அலங்கார பாகங்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், முன்புற வைசர் ஆகியவற்றுடன் வசீகரிக்கிறது.

இந்த பைக்கில் பாஸ் லைட் சுவிட்சு வசதியுடன் கூடிய டிசி ஹெட்லைட், எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் சுவிட்ச், புதிய டிஜிட்டல்- அனலாக் டயல் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார் உள்ளிட்டவையும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஹோண்டா லிவோ 110 பிஎஸ்6 மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 240 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. காம்பி பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக இரண்டு பிரேக்குகளும் இணைந்து செயல்படும்.

ஹோண்டா லிவோ பிஎஸ்6 மாடலின் டிஸ்க் பிரேக் வேரிண்ட்டில் அத்தெலிட்டிக் புளூ மெட்டாலிக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பிளாக் மற்றும் மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகள் கொடுக்கப்படும். புதிய ஹோண்டா லிவோ பிஎஸ்6 பைக் மாடலானது ஹீரோ கிளாமர், ஸ்பிளென்டர் ப்ளஸ், டிவிஎஸ் ரேடியான் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.