டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

விரைவில் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் 110சிசி மோட்டார்சைக்கிள்களின் வரிசையில் இணையவுள்ள லிவோ பிஎஸ்6 பைக் மாடலின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகவும் குறுகிய நேரம் மட்டுமே ஓடும் இந்த டீசர் வீடியோவின் மூலம் பார்க்கும்போது புதிய லிவோ பைக் பிஎஸ்6 தரத்தில் 110சிசி என்ஜினை பெற்றிருப்பது தெரிய வருகிறது. இந்த என்ஜின் கிட்டத்தட்ட சிடி110 பைக்கின் 109.51சிசி என்ஜினை ஒத்திருக்கும் என தெரிகிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

அதேபோல் சிடி110 மாடலின் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் 8.8 பிஎச்பி பவரையும், 9.3 என்எம் டார்க் திறனை தான் லிவோ பைக்கின் பிஎஸ்6 என்ஜினும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

ஆனால் கூடுதலாக இதன் என்ஜினில் பொருத்தப்பட்டுள்ள எரிபொருள்-இன்ஜெக்‌ஷன், பைக்கின் எரிபொருள் திறன் அளவை அதிகரிக்கலாம். என்ஜின் அமைப்பு தான் ஒரே மாதிரி இருக்குமே தவிர்த்து சிடி110 பைக் உடன் ஒப்பிடும்போது புதிய லிவோ மாடல் முற்றிலும் வேறுப்பட்ட தோற்றத்தில் உள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

அதனை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் வீடியோவில் லிவோ பைக்கானது கூடுதல் தேர்வாக முன்பக்க ப்ரேக் டிஸ்க்கையும், ஏசிஎஸ் ஸ்டார்டர் மற்றும் என்ஜின் கில் ஸ்விட்ச்சையும் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

இவற்றுடன் செமி-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், ஹாலோஜன் ஹெட்லைட் போன்றவையும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோண்டா நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் இந்த பிஎஸ்6 பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் அடுத்த வாரத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

லிவோ பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.67,000-ரூ.70,000 அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது சிடி110 ட்ரீம் பைக் மாடலை காட்டிலும் சில ஆயிரங்கள் மட்டுமே அதிகமாகும். அறிமுகத்திற்கு பிறகு இந்த 110சிசி பைக்கிற்கு டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மற்றும் ஹீரோ பேஷன் ப்ரோ உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு

தற்சமயம் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 110சிசி ஸ்கூட்டர் பிரிவில் பிரபலமான ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் மாடலையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து கடைசியாக சில தினங்களுக்கு முன்பு பிஎஸ்6 அப்டேட் செய்யப்பட்ட கிரேஸியா 125 ஸ்கூட்டர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Honda Livo BS6 Teased India Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X