நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

கடந்த நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை நிலவரம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த நவம்பர் மாதம், உள்நாட்டு சந்தையில், 4,12,641 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10.54 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,73,283 ஆக மட்டுமே இருந்தது.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

ஆனால் கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால், ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 16.55 சதவீதம் சரிந்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனம் 4,94,459 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

வழக்கமாக பண்டிகை காலம் முடிவடைந்தால் இதுதான் நடக்கும். பொதுவாக பண்டிகை காலத்தின்போது, இரு சக்கர வாகனங்களின் விற்பனை உச்சத்தை எட்டும். ஆனால் பண்டிகை காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் வீழ்ச்சியடைய தொடங்கி விடும். இதன்படி அக்டோபருடன் ஒப்பிடும்போது நவம்பரில் ஹோண்டாவின் இரு சக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

இதற்கிடையே ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 20,565 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 11.04 சதவீத வீழ்ச்சியாகும். ஏஎனனில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 23,116 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஹோண்டா நிறுவனம் 37.15 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 32,721 இரு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

அதே சமயம் ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி), 4,33,206 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 9.29 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா ஒட்டுமொத்தமாக 3,96,399 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

ஆனால் கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால், நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனை 17.83 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 5,27,180 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஹோண்டா நிறுவனத்தின் லைன்-அப்பில் ஆக்டிவா மிகவும் வலுவான ஒரு தயாரிப்பாக திகழ்ந்து வருகிறது.

நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா? வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்

ஹோண்டா நிறுவனம் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி கொண்டிருப்பதற்கு ஆக்டிவா ஸ்கூட்டர்தான் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்திய அளவில் பார்த்தால், ஹார்னெட் 2.0 மற்றும் ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Most Read Articles

English summary
Honda Motorcycle And Scooter India Sales Analysis - November 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X