Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபோர்ஸா ஸ்கூட்டர்களுக்கே டஃப் கொடுக்கும் தோற்றத்தில் ஹோண்டாவின் புதிய மேக்ஸி-ஸ்கூட்டர்!!
இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் ஹோண்டா பிசிஎக்ஸ்160 ஸ்கூட்டர் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறை-திறன் ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா இந்தியா நிறுவனம் அதன் பிசிஎக்ஸ் ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு கொண்டுவர பல மாதங்களாக திட்டமிட்டு வருகிறது. ஏனெனில் பிசிஎக்ஸ் ஸ்கூட்டர்களின் தோற்றத்திற்கு நம் நாட்டில் பரவலான ரசிகர்கள் உள்ளனர்.

இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த ஸ்கூட்டர்களின் இந்திய வருகை குறித்த எந்தவொரு உறுதியான அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால் நிச்சயம் பிசிஎக்ஸ் 160 ஸ்கூட்டர், அடுத்தடுத்த மேக்ஸி ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஹோண்டா இந்தியா நிறுவனத்திற்கு உந்துதலாக இருக்கும்.

ஹோண்டாவின் பிசிஎக்ஸ் குடும்பத்தில் சமீபத்தில் இணைந்துள்ள பிசிஎக்ஸ்160 ஸ்கூட்டரில் 156சிசி, சிங்கிள்-சிலிண்டர் 4-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பழைய 149சிசி, 2-வால்வு என்ஜினிற்கு மாற்றாக இந்த என்ஜின் கொண்டுவரப்பட்டுள்ளது.

என்ஜின் சுத்திகரிப்பு நிச்சயம் அட்வான்ஸ்டு வால்வ்ட்ரெயின் தொழிற்நுட்பத்துடன் செயல்திறனில் மேம்படுத்தப்பட்டிருக்கும். இதன் விளைவாக என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் 1.41 பிஎஸ் மற்றும் 1.8 என்எம் அதிகரித்து 16.31 பிஎஸ் மற்றும் 15 என்எம் ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் ஹோண்டா தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கண்ட்ரோல் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ஓட்டுனரின் உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் சஸ்பென்ஷன் போன்ற ஸ்கூட்டரின் மற்ற இயந்திர பாகங்களிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிசிஎக்ஸ் 160-ன் தோற்றம் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு புதியதாக எதையும் கொண்டிருக்கவில்லை. வழக்கமாக ஹோண்டா மேக்ஸி-ஸ்கூட்டர்கள் கொண்டிருப்பவைவற்றையே கொண்டுள்ளது.

ஜப்பானில் இந்த ஹோண்டா ஸ்கூட்டர் 2021 ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து விற்பனையை துவங்கவுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகலாம், யாருக்கு தெரியும். ஆனால் இந்தியாவில் ஹோண்டா ஃபோர்ஸா 350 மேக்ஸி-ஸ்கூட்டர் அடுத்ததாக வெளிவரவுள்ளது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும்.