2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2020 பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரை புதிய நான்கு நிறத்தேர்வுகளில் தாய்லாந்தில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நான்கு நிறத்தேர்வுகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

ஜப்பானை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா 2020 பிசிஎக்ஸ்150 மாடலுக்கு வழங்கியுள்ள நிறத்தேர்வுகளில் கருப்பு நிறம் ஸ்கூட்டரை மிகவும் ஸ்டைலாக காட்டுகிறது. இதனுடன் சிவப்பு நிறம் ஸ்கூட்டரின் முன்புற ஃபேஸியா மற்றும் இருக்கையின் முனை உள்ளிட்ட சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

கருப்பு பெயிண்ட் அமைப்பு மட்டுமின்றி வெள்ளை நிறத்தேர்விலும் இந்த 2020 மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வெள்ளை நிறத்துடனும் சிவப்பு நிறம் ஸ்கூட்டரின் சில பாகங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் க்ரே மற்றும் முழுவதும் சிவப்பு என்ற இரு பெயிண்ட் தேர்வுகளையும் புதிய பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டருக்கு ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

இந்த இரு நிறத்தேர்வுகளில் அலாய் சக்கரங்கள் தங்க நிறத்தில் ஃபினிஷிங் செய்யப்பட்டிருக்கும். இந்த புதிய நிறத்தேர்வுகள் தவிர்த்து இந்த 2020 ஸ்கூட்டர் மாடலில் வேறெந்த காஸ்மெட்டிக் மாற்றங்களையும் ஹோண்டா நிறுவனம் கொண்டுவரவில்லை.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

இதனால் இந்த ஸ்கூட்டரின் தற்போதைய மாடலில் உள்ள அதே டிசைனில் தான் ஹெட்லைட், ஸ்டைலிஷ் பாடிவொர்க் மற்றும் எல்இடி விளக்குகளுடன் உள்ளது. இதேபோல் ஹோண்டாவின் ஸ்மார்ட் கண்ட்ரோலர் வசதியும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் தொடர்ந்துள்ளது.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

ப்ளூ பேக்லிட் எல்இடி க்னாப் உடன் உள்ள இந்த ஸ்மார்ட் கண்ட்ரோலர் மூலமாக இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கின் மூடியை திறக்கவோ அல்லது பூட்டவோ முடியும். மேலும் இந்த வசதியை இன்க்னிஷன் ஸ்விட்ச் ஆகவும் செயல்படுத்த இயலும்.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

இவ்வாறான தொழிற்நுட்ப வசதிகளுடன் ஸ்மார்ட் கீ சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்டையும் இந்த 2020 மேக்ஸி ஸ்கூட்டரின் ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள வரவேற்பு விளக்குகள், சிறப்பான தொழிற்நுட்பங்களை பெற்ற கார்களில் பார்க்கலாம்.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

ஹோண்டா பிசிஎக்ஸ் ஸ்கூட்டரில் இயக்க ஆற்றலுக்கு அதே 149சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13.3 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா பிசிஎக்ஸ்150 மேக்ஸி ஸ்கூட்டரில் புதியதாக 4 நிறத்தேர்வுகள்...

இன்னும் சில வாரங்களில் தெற்காசிய சந்தையில் புதிய ஹோண்டா பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டர் விற்பனை வந்தாலும், இந்தியாவில் இதன் அறிமுகம் இன்னும் சில மாதங்களுக்கு இருக்காது. மேலும் இந்திய சந்தையில் வலுவான இடத்தை பெறுவதற்காக இந்த ஸ்கூட்டர் கிட்டத்தட்ட போட்டி மாடல்களுக்கு இணையான விலையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda PCX 150 Maxi Scooter Unveiled in Thailand
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X