ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இந்தியாவில் மிக குறைவான விலையில் புதிய பைக் மாடலை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் வலுவான அடித்தளத்தை அசைத்து பார்க்கும் வகையில் இந்த பைக் மாடலை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

ஹீரோ நிறுவனத்தின் கூட்டணியை முறித்துக் கொண்டு இந்தியாவில் தனி ஆவர்த்தனத்தை துவங்கிய ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் வாடிக்கையாளர் மத்தியில் அதிக மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற நிறுவனமாக மாறி இருக்கிறது. ஹீரோ நிறுவனத்தின் நம்பர்-1 இடத்தை குறிவைத்து இந்திய சந்தையில் களமிறங்கினாலும், அதனை எட்டுவது நினைத்தது போல் சுலபமாக இல்லை.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

மேலும், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களும் சேர்ந்து சவாலாக இருக்கின்றன. இந்த நிலையில், சாதாரண வகை பைக் மாடல்கள், ஸ்கூட்டர்கள் முதல் சூப்பர் பைக்குகள் வரை கொண்டு வந்து இறக்கினாலும், விற்பனையில் எதிர்பார்த்த இடத்தை பெற முடியாத நிலை இருக்கிறது.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இந்த சூழலில், ஊரக சந்தையில் மிக வலுவான வர்த்தகத்தை பெறுவது அவசியம் என்று கருதியிருக்கும் ஹோண்டா தற்போது மிக விலை குறைவான புதிய பைக் மாடலை கொண்டு வந்து இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக் மாடல் மூலமாக ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ் ஆகிய உள்நாட்டு நிறுவனங்களின் வலுவான அடித்தளத்தை அசைத்து பார்த்துவிட முடிவு செய்துள்ளது.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

தற்போது ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வரும் சிடி110 பைக்தான் அந்நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் மாடல். இந்த பைக் ரூ.64,500 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இதைவிட குறைவான விலை பைக் மாடலை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் கூறி இருக்கிறார்.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது, "துரதிருஷ்டவசமாக ஊரகப் பகுதி சந்தைக்கு தேவையான வலுவான மாடல்கள் இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலையில், எங்களது வர்த்தக கொள்கையின்படி, மிக சரியான விலையில் தரமான தயாரிப்புகளை கொண்டு வருவதற்கு நிச்சயம் உறுதி எடுத்துள்ளோம்.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

ஊரகப் பகுதி வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏதுவான பைக் மாடலை களமிறக்குவது எங்களது பொறுப்பாக உணர்ந்து கொண்டுள்ளோம். சிடி110 பைக் ஊரகப் பகுதிகளில் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு சரியான பைக் மாடல் அவசியம்," என்று தெரிவித்துள்ளார்.

ஹீரோவை ஒரு கை பார்க்க புதிய பட்ஜெட் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

ஹோண்டா நிறுவனம் மிகவும் விலை குறைவான பைக் மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள், தேவைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. எனவே, ஹோண்டாவின் புதிய பட்ஜெட் பைக் உடனடியாக வந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை. எனினும், மிக விரைவாக இந்த சந்தையில் இறங்குவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Honda is planning to launch low budget commuter bike modele for rural market and not revealed any timeline for this product.
Story first published: Wednesday, August 26, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X