உதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால்

பின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும் விதமாக, ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதம் பிஎஸ்-6 எஞ்சினுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் பிஎஸ்-6 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதற்கு முன்னதாகவே, ஆக்டிவா 125 மாடலின் பிஎஸ்-6 எஞ்சின் மாடலும் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த மூன்று மாடல்களுமே விற்பனையில் அசத்தி வருகின்றன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு

இந்த நிலையில், பிஎஸ்6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அண்மையில் ரீகால் செய்யப்பட்டது. கூலிங் ஃபேன் மற்றும் ஆயில் கேஜில் இருந்த குறைபாட்டை சரிசெய்வதற்காக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறைபாடுடையதாக கருதப்படும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் டீலர்களில் இதுதொடர்பாக தங்களது ஸ்கூட்டரை பரிசோதனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு

இந்த சூழ்நிலையில், ஆக்டிவா 125, ஆக்டிவா 6ஜி (110சிசி) மற்றும் டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களிலும் பின்புற சஸ்பென்ஷனில் உள்ள முக்கிய பாகம் ஒன்றில் குறைபாடு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 15ந் தேதி முதல் 24ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட மேற்கண்ட மூன்று மாடல்களையும் திரும்ப அழைத்து பரிசோதனை செய்ய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் மூலமாக இ-மெயில், போன் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர்களில் குறைபாடான பாகம் கண்டறியப்பட்டால், அதனை மாற்றித் தரப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு

தவிரவும், ஹோண்டா ஆக்டிவா 125, ஆக்டிவா 6ஜி மற்றும் டியோ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஹோண்டா இணையதளப் பக்கத்தில் தங்களது ஸ்கூட்டரின் வின் நம்பரை கொடுத்து, தங்களது ஸ்கூட்டர் இந்த ரீகால் அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு

மேலும், வசதியான நேரத்தில் சர்வீஸ் முன்பதிவு செய்து கொண்டு ஸ்கூட்டரை பரிசோதனை செய்து கொள்ள முடியும். இதனால், கால தாமதம் மற்றும் நேர விரயத்தை வாடிக்கயாளர்கள் தவிர்க்க முடியும்.

Most Read Articles
English summary
Honda Motorcycle and Scooter India has announced a voluntary recall for Dio, Activa 125 and 6G scooters in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X