200சிசி பைக் மார்க்கெட்டில் புதிய பைக்கை களமிறக்கும் ஹோண்டா

புதிய பைக் மாடலின் வருகை குறித்த ஆவலை ஏற்படுத்தும் விதத்தில் டீசர் வீடியோ ஒன்றை ஹோண்டா வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய பைக் மாடலின் விபரங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய பைக்குடன் 200சிசி மார்க்கெட்டில் இறங்குகிறது ஹோண்டா

இருசக்கர வாகன மார்க்கெட்டில் மிக வலுவான வர்த்தகத்தை ஹோண்டா வைத்துள்ளது. மேலும், தனது சந்தையை பலப்படுத்தும் வித்ததில் புதிய பைக் மாடல்களை கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. அதன்படி, வரும் 27ந் தேதி புதிய பைக் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

புதிய பைக்குடன் 200சிசி மார்க்கெட்டில் இறங்குகிறது ஹோண்டா

இந்த புதிய பைக் மாடலானது 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஹார்னெட் பைக் மாடலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. செயல்திறனில் ஹார்னெட் பைக்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும்.

புதிய பைக்குடன் 200சிசி மார்க்கெட்டில் இறங்குகிறது ஹோண்டா

ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹார்னெட் 160ஆர் பைக் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. முறுக்கலான தேக அமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால், அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

எனவே, இந்த பிராண்டு மதிப்பை வைத்து சக்திவாயந்த 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலையும் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய பைக்குடன் 200சிசி மார்க்கெட்டில் இறங்குகிறது ஹோண்டா

ஏனெனில், 200சிசி மார்க்கெட்டில் ஹோண்டாவுக்கு ஒரு பைக் மாடல் அவசியமாகி இருக்கிறது. மேலும், இந்த பைக் மாடலானது 200சிசி பைக் மாடலை எதிர்பார்க்கும் ஹோண்டா பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.

புதிய பைக்குடன் 200சிசி மார்க்கெட்டில் இறங்குகிறது ஹோண்டா

புதிய பைக் மாடலில் எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், நீலம் வண்ணத்துடன் கூடிய டியூவல் டோன் பாடி கலர் மற்றும் சாம்பல் வண்ணத் தேர்வு, தங்க வர்ண பூச்சு கொண்ட முன்புற ஃபோர்க்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய பைக்குடன் 200சிசி மார்க்கெட்டில் இறங்குகிறது ஹோண்டா

புதிய ஹோண்டா ஹார்னெட் 200ஆர் பைக்கில் 184சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஹோண்டா சிபிஆஎஃப் 190ஆர் பைக்கில் இருக்கும் எஞ்சின் மாற்றங்களுடன் இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda has released a teaser video of a new bike model ahead of it launch on August 27, 2020.
Story first published: Monday, August 24, 2020, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X